• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை

வெளிமாவட்ட வர்த்தகர்களால்  தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து  இன்று  கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது ” வெளிமாவட்டத்தில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் மெகா சேல்ஸ் எனக்  கூறி கிளிநொச்சி வர்த்தகர்களின் வியாபாரத்தில்  பாதிப்பை ஏற்படுத்துவதாக கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன்  இப்பிரச்சினைக்கு உடனடியாகத்  தீர்வொன்றினைப் பெற்றுத்தருமாறும் கிளிநொச்சி வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றினையும்  அவர்கள் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply