• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில். மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய ஆசிரியர் கைது

இலங்கை

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 52 வயதான  ஆசிரியர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்,  பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply