76 பேரின் உயிரை பறித்த துருக்கி தீவிபத்து - 9 பேர் கைது
மேற்கு துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தீவிபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 45 பேரின் சடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எஞ்சியுள்ள சடலங்களை அடையாளம் காண மரபணு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா குறிப்பிட்டுள்ளார்.






















