யு சான்றிதழை பெற்ற குடும்பஸ்தன்
சினிமா
இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'குடும்பஸ்தன்'. தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இது நகைச்சுவையான பொழுதுபோக்கு கொண்ட குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது.
குருசோமசுந்தரம் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு வைசாக் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் முதல் பாடலான ஸீரோ பேலன்ஸ் மற்றும் கண்ண கட்டிகிட்டு ஹீரோ பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படம் குடியரசு தின விடுமுறையையொட்டி வரும் 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'குடும்பஸ்தன்' படத்திற்கு 'யு' சான்றிதழை சென்சார் போர்டு வழங்கி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
முன்னதாக, இப்படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஜீ5 தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.