யாழில். இளைஞனின் ஆடைகளைக் களைந்து கொடூரத் தாக்குதல் - 20 பேர் கொண்ட குழுவை தேடும் பொலிஸார்
இலங்கை
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை அவரது தாயார் முன்னிலையில் நிர்வாணமாக்கி, சித்திரவதை செய்து தாக்கிய சம்பவம் தொடர்பில் 20 பேர் கொண்ட கும்பலைப் கோப்பாய் பொலிஸார் தேடி வருகின்றனர்.
இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார் எனவும், இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனை மோதலாக வெடித்தமையே இக் கொடூரத் தாக்குதலுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் ஏனையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த இளைஞன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.