• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக ஒருவார காலப்பகுதிக்குள்  அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ”உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவை முழு வீச்சில் இடம்பெற்று வருவதாகவும்  ஜனாதிபதி” தெரிவித்துள்ளார்.

அத்துடன் மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் பற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை என்பதால் அவரை இலங்கைக்கு அழைத்து வருவது கடினமாகவுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த விவகாரத்தின் பாரதூரதன்மையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி, அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.
 

Leave a Reply