வெள்ளத்தில் தத்தளிக்கும் அநுராதபுரம்
இலங்கை
அநுராதபுரத்தில் பெய்த கனமழை காரணமாக, அம்மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக ஜெய ஸ்ரீமஹா போதி மாவத்தையில் அமைந்துள்ள சுற்றுலா பொலிஸ் நிலையம், தொல்பொருள் அலுவலகம், ஹோட்டல், பாடசாலை ஆகியன, நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கலா வாவி, நாச்சதுவ, கண்டி வாவி உள்ளிட்ட பெரிய குளங்களிலிருந்தும், பல சிறிய குளங்களிலிருந்தும் வெளியேறும் நீர் மல்வத்து ஓயாவில் தேங்கியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் சில இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் மழை பாதிவாகக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.