10 நாட்களில் மதகஜராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்..
சினிமா
பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்து வசூலில் வேட்டையாடி வரும் திரைப்படம் மதகஜராஜா. 13 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்தாலும், மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷால், சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் மறைந்த திரையுலக பிரபலங்கள் மணிவண்ணன் மற்றும் மனோபாலாவை மீண்டும் திரையில் பார்க்க வாய்ப்பும் கிடைத்தது.
அரண்மனை 4 படத்தின் மூலம் 2024ஆன் ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்த இயக்குநர் சுந்தர் சி, மதகஜராஜா படத்தின் மூலம் இந்த ஆண்டின் முதல் வெற்றியை தமிழ் சினிமாவிற்கு தேடி கொடுத்துள்ளார்.
10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மதகஜராஜா உலகளவில் 10 நாட்களில் ரூ. 46 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கடந்த வாரம் வரை வசூல் உச்சத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனாலும், படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.