• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொலன்னறுவை – மனம்பிட்டிய ரயில் சேவை இடைநிறுத்தம்

இலங்கை

பொலன்னறுவை மற்றும் மானம்பிட்டிக்கு இடையிலான தற்காலிக ரயில் சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பொலன்னறுவை – மானம்பிட்டிக்கு இடையிலான பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக, பஸ்கள் உட்பட வாகனப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக இந்த ரயில் சேவை ஆரம்பத்தில் ஜனவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

எவ்வாறெனினும், வெள்ள நீர் வடிந்ததையடுத்து, பொலன்னறுவை – மானம்பிட்டிய வீதியை வாகன போக்குவரத்துக்காக பொலிஸார் இன்று திறந்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து தற்காலிக ரயில் சேவையை நிறுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
 

Leave a Reply