கிளிநொச்சியில் அஸ்வெசும் இரண்டாம் கட்ட பணிகள்
இலங்கை
அஸ்வெசும் இரண்டாம் கட்ட விண்ணப்பதாரர்களின் வீட்டிற்கு சென்று தகவல் பதிவு செய்யும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை மற்றும் தர்மபுரம் கிராம அலுவலர்கள் மக்களின் குடியிருப்புக்கு சென்று தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 1215 விண்ணப்பதார்கள் இரண்டாம் கட்டத்திற்காக பதிவு செய்துள்ளதுடன் குறித்த பணி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.