• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை ஆராய்வதற்கு எந்த குழுவும் இல்லை- இராமநாதன் அர்ச்சுனா

இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை ஆராய்வதற்கு இங்கு எந்த குழுவும் நியமிக்கப்படவில்லை” என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த யாழ்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் ஒழுங்கு பிரச்சனை ஒன்றை முன்வைத்து கருத்து வெளியிட்டிருந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  கடந்த ஒரு மாத காலமாக சபையில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. கடந்த 8ஆம் திகதி எழுத்து மூலமாக முறைப்பாடு செய்துள்ளேன். ஆனாலும் இன்று வரை எனக்கு தீர்வு வழங்கப்படவில்லை.

இன்று 21ஆம் திகதி இன்று வரை எனக்கு தீர்வு வழங்கப்படவில்லை. இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்தால் இரண்டு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் இல்லை என்ற தோற்றப்பாடே வெளிப்படும். நாங்கள் இந்த நாட்டில் 30 வருடங்களாக யுத்தம் செய்தவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை ஆராய்வதற்கு இங்கு எந்த குழுவும் நியமிக்கப்படவில்லை” இவ்வாறு இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டியுள்ளார்.
 

Leave a Reply