• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நானுஓயா-ரதெல்ல வீதியில் விபத்து-பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை

நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறி ஒன்று, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது

வீதியில் அதிவேகமாகச் சென்ற லொறியில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வேககட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி விபத்து ஏற்பட்டதாகக் நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்

விபத்தினால் லொறியில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று லொறி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இதேவேளை கடந்த சில நாட்களாக ரதெல்ல குறுக்கு வீதியில் செல்லும் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
 

Leave a Reply