கனடாவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
கனடா
கனடாவில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கிரேட்டர் சட்பெரி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட மோதலில், ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவம் கிளிண்டன் வீதியில் கொள்ளை முயற்சி தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், ஆயுதம் ஏந்திய ஒருவருடன் நேருக்கு நேர் மோதியதாகவும், அந்த நபர் அந்த மோதலின் போது உயிரிழந்ததாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுடன் பொலிஸார் தொடர்புபட்டிருப்பதனால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
























