கனடா மீது இன்று டொனால்ட் ட்ரம்ப் வரி விதிக்க மாட்டார்
கனடா
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது இன்றைய தினம் வரி விதிக்க மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
கனடா, மெக்ஸிக்கோ போன்ற நாடுகளின் ஏற்றுமதிகள் மீது 25 வீத வரி விதிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47ம் ஜனாதிபதியாக இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்கின்றார்.
இந்த நிலையில் பதவி ஏற்கும் முதல் நாளில் கனடா மீது வரி விதிப்பு மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியங்கள் இல்லை என கனடிய பிரதான ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் முன்னணி ஊடகங்களும் வரி விதிப்பு இன்று இடம்பெறாது என தெரிவித்துள்ளன.
வெள்ளை மாளிகை அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















