என்னவா இருக்கும் - நெக்ஸ்ட் லெவல் அப்டேட் கொடுத்த ஆர்யா, சந்தானம்
இலங்கை
இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கவுள்ளார். இப்படத்தில் சந்தனத்துடன் இணைந்து ஆர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக மீனாக்ஷி சவுத்ரி நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன் , செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சந்தானம், ஆர்யா, கவுதம் மேனன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து நெக்ஸ்ட் லெவலுக்கு நாங்கள் ரெடி என தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
இந்த நெக்ஸ்ட் லெவல் என்னவாக இருக்கும் என்று நெட்டிசன்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.























