ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
இலங்கை
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (26) மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே இன்று 286.66 ரூபாவாகவும், 295.67 ரூபாவாகவும் உள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 286.51 ரூபாவாகவும், 295.51 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
எனினும், மத்திய கிழக்கு உட்பட ஏனைய பல வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது.