• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குவைட் சிறைச்சாலையில் இருந்து இலங்கை கைதிகள் நாட்டிற்கு வருகை

இலங்கை

போதைப்பொருள் குற்றச்சாட்டில் குவைட் மத்திய சிறைச்சாலையில். சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இலங்கை கைதிகள் 104 பேரில் 32 பேர குவைத்தில் இருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளனர்

குவைத் அரசுக்கும் இலங்கைக்கும் இடையில் 2007 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், அந்நாட்டின் அரசாங்கத்தால் இவர்கள், இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்

குவைத் நாட்டில், போதைப்பொருள் பாவனை, வர்த்தகம் மற்றும் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்பட்ட இலங்கையர்கள் அடங்கிய ஒரு குழுவே நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி குவைத் அரசர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடன் இலங்கைத் தூதுவரின் நெருங்கிய உறவுகளைப் பயன்படுத்தி, அவர்களுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி, குவைத் விமானப்படையின் சி-17 விமானத்தின் மூலம் அவர்கள் அழைத்துவரப்பட்டனர்.

இந்த இலங்கைக் கைதிகளை இலங்கையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இந்த நாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் குவைத் கைதிகள் எவரும் இல்லை என்பது விசேட அம்சமாகும்.

அத்துடன் இந்த விமானத்தில் கைவிலங்குகளுடன் இலங்கை கைதிகள் வந்துள்ளதுடன் அவர்களுடன் குவைத் அரசின் பாதுகாப்பு அதிகாரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் அடங்கிய குழுவும் இருந்தனர்.

இதேவேளை இலங்கை சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று பேருந்துகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. கைதிகள் வந்து இந்த கைதிகளை வெலிக்கடை சிறைக்கு அழைத்துச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
 

Leave a Reply