• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ராமேஸ்வரம்- தலைமன்னார் ஆகியவற்றுக்கிடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை

இலங்கை

ராமேஸ்வரம்- தலைமன்னார் ஆகியவற்றுக்கிடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் முதற் கட்டமாக 150 பயணிகள் செல்லும் வகையில் கப்பல் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டிணம் முதல் காங்கேசன்துறை வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தினை முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இறங்கு தளம், பயணிகள் தங்குமிடம், சுங்க மற்றும் குடிமை பிரிவு சோதனை மையங்கள் ஆகிய கட்டுமானங்களை அமைப்பதற்கான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் மத்திய அரசின் அனுமதிக்காக அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனடிப்படையில் தமிழ்நாடு கடல்சார் வாரிய அதிகாரிகள் குழுவினர் ராமேஸ்வரம் தீவின் பல்வேறு இடங்களில் ஆய்வினை மேற்கொண்டனர்.

அந்தவகையில் தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம், பாம்பன் குந்துகால் துறைமுகம், தனுஷ்கோடி பாக்ஜலசந்தி கடற்கரை உள்ளிட்ட இடங்களையும் அதிகாரிகள் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply