மன அழுத்தத்துக்கும் ஆளானேன்- காதல் தோல்வி அனுபவங்களை பகிர்ந்த நடிகை ராஷி கண்ணா
சினிமா
தமிழில் 'இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, அரண்மனை 4-ம் பாகம்' போன்ற படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது அவரது நடிப்பில் 'த சபர்மதி ரிப்போர்ட்' என்ற இந்தி படம் திரைக்கு வர உள்ளது.
பட நிகழ்ச்சியில் ராஷி கண்ணா தனது காதல் தோல்வி அனுபவங்களை பகிர்ந்தார். அவர் கூறும்போது, "சாதாரணமாகவே நான் அதிக உணர்ச்சிவசப்படக்கூடிய ரகம். எனக்கு ஏற்கனவே ஒரு காதல் கதை உள்ளது. சில காரணங்களால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. அப்போது நான் மிகவும் வேதனைப்பட்டேன். மன அழுத்தத்துக்கும் ஆளானேன். அதன்பிறகு என்னை நானே மாற்றிக்கொண்டு வலுவாக நின்றேன்.
நடிப்பின் மீது கவனம் செலுத்தினேன். தெலுங்கில் எனது முதல் படம் வெளியானதும் திருப்பதி கோவிலுக்கு சென்றேன். அங்கு மக்கள் அதிக அளவில் என்னை முற்றுகையிட்டனர். கூட்டத்தில் இருந்து என்னை வெளியே அழைத்துவர பாதுகாவலர்கள் கஷ்டப்பட்டனர். அந்த சம்பவத்தை எப்போதும் மறக்க முடியாது. ஒரு நடிகைக்கு இவ்வளவு புகழ் கிடைக்கும் என்று அதற்கு முன்பு எனக்கு தெரியாது" என்றார்.