• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2035-க்குள் 81 சதவீதம் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கு பிரித்தானியா புதிய இலக்கு

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், உலகளாவிய உச்சி மாநாட்டில் புதிய காலநிலை மாற்ற இலக்குகளை அறிவித்துள்ளார்.

கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் பிரித்தானியா முன்னிலை வகிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

அதன்படி, 2035-ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை 81% குறைக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

இதற்கு முன் கொன்சர்வேட்டிவ் ஆட்சி 2035-க்குள் 78% குறைக்க இலக்கு வைத்திருந்தது, ஆனால் அதில் சர்வதேச விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து உமிழ்வுகளும் சேர்க்கப்பட்டிருந்தன.

இந்த இலக்கு, 1990 மட்டங்களை ஒப்பிடுகையில் உலக வெப்பமடைவை 1.5°C குறைப்பதற்கான பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது.

பிரதமர் ஸ்டார்மர் புதிய இலக்கு தொடர்பாக பேசும் போது, மக்களின் வாழ்க்கையில் அரசு தலையிட வேண்டாம் என்பதே தனது நோக்கம் என்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் இந்த இலக்குகளை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள் அறிவிக்கப்படாதபோதிலும், ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த £11.6 பில்லியன் பருவநிலை நிதி ஆதரவை 2026 வரை வழங்குவதாக ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார்.

பிரித்தானியா, 2050க்குள் முழுமையான பூஜ்ஜிய (Net Zero) உமிழ்வை அடைவதற்கான பாதையில் முன்னேறிவருகிறது. இது 2015-ல் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் சட்டபூர்வமாக உள்ள இலக்காகும்.

அண்மையில், லேபர் ஆட்சி புதிய ஓன்ஷோர் காற்றாலை திட்டங்களை ஆதரித்து வருகிறது, மேலும் 2024 செப்டம்பரில் நாட்டின் கடைசி நிலக்கரி ஆலையை மூடியுள்ளது.

எனினும், சில அரசாங்க ஆலோசகர்கள், மக்கள் தாமாக முன்வந்து பொருட்களின் நுகர்வைக் குறைக்காவிட்டால் இறைச்சி மற்றும் பால் மீதான வரிகள் தேவைப்படலாம் என்றும், பெட்ரோல் கார்களின் பயன்பாட்டை படிப்படியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இவ்வாறு மாற்றங்களை ஏற்றுக்கொண்டால் இலக்கை அடைவது சாத்தியமாகும் என்று ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply