• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் யுவதியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த ஓய்வுபெற்ற அரச ஊழியருக்கு மனைவியால் நேர்ந்த கதி

இலங்கை

யாழ்ப்பாணத்தில் 61 வயதான ஓய்வு பெற்ற அரச ஊழியரின் தலையில் காயங்களுடன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமப்வம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பக்கத்து வீட்டில் இருந்த ஓய்வு பெற்ற அரச ஊழியருடன் ஆசிரியர் ஒருவரின் 20 வயதுடைய மகள் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டதாக சந்தேகித்தே ஆசிரியரும் அரச ஊழியரின் மனைவியும் சேர்ந்து இருவர் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.

இச்சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபரின் மனைவியும் அரச அதிகாரியாக உள்ளதாகவும் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மனைவி பொலிஸாரிம் முறையிடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

காயமடைந்த ஓய்வு பெற்ற அரச ஊழியரின் மகன் பொறியியலாளர் எனவும் தெரியவருகின்றது.

ஓய்வு பெற்ற அரச ஊழியரின் பெண்கள் பாவிக்கும் மோட்டர் சைக்கிளை குறித்த ஆசிரியரின் மகள் அடிக்கடி உபயோகித்து வந்துள்ளார்.

தாயார் மற்றும் தந்தை இல்லாத நேரங்களில் குறித்த மோட்டார் சைக்கிளை வாங்கி ஓட்டிப் பழகி வந்ததாகத் தெரியவருகின்றது.

இந் நிலையிலேயே இருவரும் நெருங்கிப் பழகியிருக்கலாம் என அயலவர்கள் மூலம் தெரியவருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply