• Welcome to TamilsGuide
செய்திகள் 1

85 வயது முதியவரை காதலித்து கரம் பிடித்த 24 வயது பெண் - சமூக வலைதளத்தில் வைரலாகும் திருமணம்

அமெரிக்காவை சேர்ந்த 24 வயது இளம் பெண் 85 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தை சேர்ந்த 24 வயதான மிராக்கி போக்(Miraki Boggs) என்ற இளம்பெண், 2019ம் ஆண்டு 85 வயது ரியல் எஸ்டேட் தரகரான சார்லஸ்(Charles) என்பவர் சந்தித்துள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் இடையிலான சந்திப்பு அடிக்கடி நடக்கவே, இந்த காலகட்டத்தில் சார்லஸ் மற்றும் மிராக்கி போக் இடையிலான உறவு காதலாக வளர்ந்துள்ளது.

இருவரின் காதலுக்கும் மிராக்கியின் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இருவரும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் காதல் ஜோடி தற்போது ஐவிஎஃப் (IVF) முறையை பயன்படுத்தி தங்களுடைய குழந்தையை பெற்றெடுக்க திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சார்லஸ்-மிராக்கி தம்பதியின் திருமணம் தொடர்பான செய்தி சமூக ஊடகங்களில் மீண்டும் அதிகமாக பரப்பட்டு வருகிறது.

தற்போதுள்ள 90’s கிட்ஸ் திருமணம் நடைபெறாமல் கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில், தன்னுடைய சொந்த தாத்தாவை விட 10 வயது கூட உள்ள 85 வயது முதியவரை 24 வயது இளம் பெண் திருமணம் செய்து குழந்தைகளுக்கு திட்டமிட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
 

Leave a Reply