• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கேபிள் கார் திட்டம் - மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இலங்கை

தனியார் நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்தில் தேவையற்ற வகையில் தலையிடவோ அல்லது இடைநிறுத்தவோ கூடாது என கம்பளை உடபலத்த பிரதேச செயலாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16)இடைக்காலத் தடை  உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுமார் 1,621.5 மீற்றர் ரோப்வேயுடன் கூடிய கேபிள் கார் திட்டத்தை உருவாக்க, இயக்க மற்றும் மாற்றுவதற்கான மனுதாரரின் திட்டத்திற்கு பிரதேச செயலாளரின் சட்டவிரோதமான முறையில் தலையீடு செய்கிறார் எனவும், இதனால்  தங்களுடைய சேவையை முன்னெடுக்க முடியாமல் இருப்பதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறித்த வழக்குத் தொடர்பில் சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் ஷெஹானி அல்விஸ் மற்றும் நமிக் நஃபத் ஆகியோர் மனுதாரர் சார்பில் ஆஜராகினர்.

இந்நிலையில் வழக்கினை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் கேபிள் கார் திட்டத்தின் பணிகளுக்கு இடையூறுகள் அல்லது தலையீடுகள் ஏற்படாதவாறு கம்பளை பிரதேச செயலாளருக்கு  இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இந்த இடைக்கால உத்தரவு ஒக்டோபர் 29 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply