• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கிறார்களா? – கஜேந்திரன் எம்பி கேள்வி

இலங்கை

சரணடைந்தவர்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கிறார்களா? என கஜேந்திரன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் நேற்றையதினம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முன்பாக கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம், எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும் என கூறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்து.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான மரபணு பரிசோதனை கூட சர்வதேச சமூகத்தால் பொறுப்பெடுக்கப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும். உள்ளக பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லை. உள்ளக நீதி கட்டமைப்புகள் மீதும் நம்பிக்கை இல்லை என தெரிவித்தார்.

இங்கே பிரதேசங்களில் இருக்கின்ற நீதிபதிகள் தமிழர்களாக இருந்தாலும் கூட இலங்கை அரச கட்டமைப்பு என்பது, இனவாத மயப்படுத்தப்பட்டிருக்கின்ற காரணத்தினாலே இலங்கை அரச கட்டமைப்புக்குள் உள்ளக பொறிமுறைக்குள் முன்வைக்கப்படுகின்ற எந்தவொரு நீதி பொறிமுறையையும் நாங்கள், ஏற்றுக் கொள்வதற்கோ, நம்புவதற்கோ தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.

ஒரு முழுமையான சர்வதேச, பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் மீள, வலியுறுத்துகிறோம்.

ஊடகவியலாளர்களுக்கு இந்த ஆகழ்வுப்பணி நடைபெறும் போது தொடர்பாக அவர்கள் அவதானிக்க கூடியதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான செயற்பாட்டினை நாங்கள் ஒரு கண்துடைப்பாகவே பார்க்கின்றோம். உள்ளக விசாரணை செயற்பாட்டை முற்றாக நிராகரித்து சர்வதேச விசாரணையை நாங்கள் வலியுறுத்துகிறோம் என மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply