• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தொழிலாளர் இராஜாங்க அமைச்சராக வடிவேல் சுரேஷ் நியமனம்

இலங்கை

தொழில் இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அதேபோன்று, அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக அலி சாஹிர் மௌலானாவை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலாகத்தில் இன்று பிற்பகல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்காரவும் விளையாட்டு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சராக இருந்த ஹரின் பெர்ணான்டோவும் பதவி விலகியதைத் தொடர்ந்தே இந்த அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply