• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனாவில் 18 ஆண்டுகளில் மிகக் குறைந்த திருமண விகிதம்

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சீனாவின் திருமண விகிதம், கடந்த 18 ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த மட்டத்திற்குச் சரிந்துள்ளது.

இதன் காரணமாக, அந்நாட்டின் பிறப்பு விகிதம் மேலும் வீழ்ச்சியடைவதுடன், மக்கள்தொகைக் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய சமநிலையின்மை குறித்த கவலையும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் குழந்தை பெற்றுக்கொள்வது திருமணத்துடன் நெருக்கமாகத் தொடர்புபட்டுள்ள நிலையில், திருமணங்களின் எண்ணிக்கை குறைவடைவது அந்நாட்டின் பிறப்பு விகிதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
 

Leave a Reply