• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பயன்பாடற்ற பெருந்தோட்டக் காணிகளை நீண்டகால குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி

இலங்கை

இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி ஆகிய நிறுவனங்களின் கீழ் பயன்பாடின்றி உள்ள காணிகள் மற்றும் சொத்துக்களை உச்சப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், தெரிவுசெய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 1,514 ஹெக்டேயர் காணி, சுற்றுலா விடுதிகள், 10 அழகிய இடங்கள் மற்றும் இயங்காத நிலையிலுள்ள 15 தொழிற்சாலைகளுக்காக விருப்பக் கோரல்கள் கோரப்பட்டிருந்தன.

இதற்காக 470 முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், குறுகிய பட்டியல்படுத்தப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து 30 காணிகள் மற்றும் சொத்துக்களுக்காக 44 திட்ட முன்மொழிவுகள் பெறப்பட்டன.

குறித்த முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த உயர்மட்ட பெறுகைக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, 15 காணிகள் மற்றும் சொத்துக்களைத் தெரிவுசெய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்குவதற்காக பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

Leave a Reply