• Welcome to TamilsGuide
செய்திகள் 1

PHI சங்கம் அதிரடி முடிவு - டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்

இலங்கை

நாடு முழுவதும் டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் அனைத்தையும் இன்று (20) முதல் இடைநிறுத்துவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) சங்கம்  தீர்மானித்துள்ளது.

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த சுகாதார அதிகாரி ஒருவரின் இடமாற்றத்தைக் கண்டித்தே அவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

நேற்றிரவு (19) நடைபெற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமில் முத்துக்குட தெரிவித்தார்.

விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் உள்ள மிக மூத்த சுகாதார மருத்துவ அதிகாரி தன்னிச்சையாக இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இந்த இடமாற்றத்தைக் கண்டித்து, நாளை (21) நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தவும் சங்கம் தீர்மானித்துள்ளதாக சாமில் முத்துக்குட கூறினார். 

அதிகாரிகளின் பதிலைப் பொறுத்து, இப்போராட்ட நடவடிக்கையைத் தொடர்வது குறித்த மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply