• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வசந்த கரன்னகொட, யோஷிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

இலங்கை

ஊழல் வழக்கு ஒன்று தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (20) குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன.
 

Leave a Reply