• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமைதியான முறையில் தேர்தல் வெற்றியை மக்கள் கொண்டாட வேண்டும்

இலங்கை

”ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து வன்முறைகள் இன்றி அமைதியான முறையில் தேர்தல் வெற்றியை மக்கள் கொண்டாட வேண்டும்” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க பஞ்சிகாவத்தை சைக்கோஜி பாலர் பாடசாலையில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அமைதியான முறையில் வன்முறைகளின்றி மோதல் இன்றி தேர்தல் இடம்பெற்றது.

நாட்டில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையில் இந்த தேர்தல் அமையப்பெறும்.இலங்கை வரலாற்றில் இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது.

தேர்தல் வெற்றியின் பின்னரும் அமைதியாக செயற்பட வேண்டும். எமது நாட்டிற்கு புதிய அரசியல் கலாசாரம் ஒன்றே தேவைப் படுகின்றது.ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படவேண்டும்.

எனவே அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வன்முறைகள் இன்றி தேர்தல் வெற்றியை மக்கள் கொண்டாட வேண்டும். ஜனாதிபதி ஜனநாயக விரோத செயற்பாடுகளை முன்னெடுக்கமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது.

தேர்தலில் வெற்றிபெறும் ஜனாதிபதியிடம் கடமைகளை ஒப்படைத்துவிட்டு அவர் ஓய்வு பெறுவார் என நினைக்கின்றோம்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply