• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு இயக்குநர் இமயம் பாரதிராஜா

பிறப்பு 17 JUL 1941 / இறப்பு 10 JUN 2026

இந்தியா தேனி அல்லிநகரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியரும், நடிகருமான திரு இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

பாரதிராஜா (இயற்பெயர்: சின்னசாமி பெரியமாயத்தேவர்) 1941 ஜூலை 17 அன்று அல்லிநகரம் பகுதியில் பிறந்தார். தமிழ் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் மற்றும் நடிகராகப் புகழ்பெற்றவர்.

"என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா..." தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர்

கிராமப்புறச் சூழலில் வளர்ந்த பாரதிராஜாவுக்கு சிறு வயதிலிருந்தே கலை மற்றும் கதையாக்கத்தில் ஆர்வம் இருந்தது. திரைப்படத் துறையில் வாய்ப்புக்காக சென்னை வந்த அவர் பல்வேறு வேலைகளைச் செய்தபின் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

பாரதிராஜா கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் புட்டண்ணா கனகலின் உதவியாளராகத் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், பி. புல்லையா, எம். கிருஷ்ணன் நாயர், அவினாசி மணி, ஏ. ஜெகந்நாதன் ஆகியோருக்கு உதவி இயக்குநராகப் பங்காற்றினார். 1977-ஆம் ஆண்டு இவரது முதற்படமான 16 வயதினிலே திரைப்படத்தில் திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு முன் பெரும்பாலும் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட படங்களுக்கு மாறாக, கிராமிய வாழ்க்கையையும் இயற்கைச் சூழலையும் உண்மைத்தன்மையுடன் திரையில் காட்டினார்.

மறக்க முடியாத படைப்புகள் கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை , வேதம் புதிது , கிழக்கு சீமையிலே , கருத்தம்மா, அந்திமந்தாரை.

இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற பல ’ரா’ வரிசைக் கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர். இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

சாதனைகள்:
6 தேசிய திரைப்பட விருதுகள்
பல மாநில மற்றும் பிலிம்பேர் விருதுகள்
2004 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது
2005 ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம்

நந்தி விருதுகள்:
1981 - சிறந்த இயக்குநர் நந்தி விருது- சீதாகொகா சிலுகா

விஜய் விருதுகள்:
2012 - தமிழ்த் திரைப்படப் பங்களிப்பு
2013 - சிறந்த துணை நடிகருக்கான பாண்டிய நாடு

பிற விருதுகள்:
1980 - தென்னிந்தியத் திரைப்படத் தொழில்நுட்ப வல்லுநர்கள்: கல்லுக்குள் ஈரம் படத்திற்காக சிறந்த தொழில்நுட்ப விருது 2005 - சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் கௌரவ முனைவர் பட்டம்

2026 ஜூன் 10 அன்று, 84 வயதில் சென்னை இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக பாரதிராஜா காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.

தமிழ் சினிமாவில் கிராமத்தின் மண்வாசனையை உலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர்களில் பாரதிராஜா மிக முக்கியமானவர். அவரது படைப்புகள் இன்றும் தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.

தமிழ் சினிமாவில் கிராமிய மண்வாசனையையும், மனித உணர்வுகளையும் தனித்துவமான படைப்புகள் மூலம் மக்கள் மனங்களை வென்ற பாரதிராஜா அவர்களின் மறைவிற்கு RIPBOOK, சினி உலகம் இணையதளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர் நலம் விரும்பிகள் அனைவரின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது.  
தகவல்: RIPBOOK 

Leave a Reply