• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சேலையில் நடிகை அபர்னா தாஸின் போட்டோஷூட்

சினிமா

ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவரான அபர்ணா தாஸின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை அபர்ணா தாஸ். இதன்பின், 'டாடா' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.

தமிழ் சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டி வரும் அபர்ணா தாஸ், மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். மேலும், அடுத்ததாக இவர் நடிப்பில் 'வதந்தி' வெப் சீரிஸ் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஸ்லீவ்லெஸ் சேலையில் எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அபர்ணா தாஸின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. 

Leave a Reply