• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளைஞர்களுக்கு சலுகை விலையில் கமெரா உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் – சஜித்

இலங்கை

புகைப்படம் எடுத்தல் என்பது ஒரு அழகான பொழுதுபோக்கு அம்சமாகும். நானும் வனவிலங்கு புகைப்படக் கலைஞராக அத்தகைய பொழுதுபோக்கில் ஈடுப்பட்டு வருகிறேன். புகைப்படக் கலைஞர்களையும் புகைப்படத் தொழில்முனைவோரையும் உருவாக்கும் ‘Image Expo’ போன்ற கண்காட்சிகள் நடத்தப்படுவது காலத்தின் தேவையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பாடசாலை மட்டத்தில் புகைப்படக் கலையைக் கற்பதற்கும் அதில் ஆர்வம் காட்டுவதற்கும் நபர்களை ஒன்று சேர்க்கும் சங்கங்கள் காணப்படுவதனால், இச்சங்கங்களுக்கும் சலுகை விலையில் கமெராவைப் பெற்றுக்கொள்ளும் முறையொன்று உருவாக்கப்பட வேண்டும். கமெரா மற்றும் புகைப்படக் கலையை ஒரு தொழில்முனைவாக மேற்கொள்ளும் இளைஞர்களுக்குச் சலுகைக் வட்டி முறைமையின் கீழ் அல்லது தவணை முறையில் செலுத்தக்கூடியவாறு கமெரா உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய முறையொன்றை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டப வளாகத்தில் ‘CakeraLK’ நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘Image Expo 2026’ கண்காட்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தா்ர்.

புதிய கமெரா உபகரணங்கள் உள்ளிட்டவை தொடர்பில் ஆராய்ந்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சிரேஷ்ட மற்றும் ஆரம்பநிலை புகைப்படக் கலைஞர்களைச் சந்தித்து நிநேகபூர்வ கலந்துரையாடல்களிலும் இங்கு ஈடுபட்ட
 

Leave a Reply