கதாநாயகர்களையே ஓரங்கட்டி விடும் நடிப்புக்கு சொந்தக்காரராக இருந்தார் எம் ஆர் ராதா
சினிமா
தமிழ் திரைப்படங்களின் போக்கையே மாற்றி அமைத்தது இரண்டு படங்கள் தான் ஒன்று 1952 இல் வெளியான கலைஞரின் தீப்பறக்கும் வசனத்தில் உருவான பராசக்தி அடுத்து 54 இல் வெளியான ரத்தக்கண்ணீர்
இந்த படத்திற்கு சமூக சிந்தனையாளர் திருவாரூர் தங்கராசு வசனம் . இதில் ஒற்றுமை என்னவென்றால் இரண்டு படங்களையும் இயக்கியது இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சுவாகும் அதற்கு முன்பு வரை படம் முழுக்க பாடல்கள் நிறைத்த பாகவதர் படங்களும் ராஜா காலத்து கதைகளைக் கொண்ட படங்களாக தான் வந்து கொண்டிருந்தது இந்த இரண்டு படங்களும் தான் தமிழ் சினிமாவின் போக்கையே வசன ஓரியண்டலாக மாற்றி அமைத்தன
அதிலும் ரத்த கண்ணீரில் எம் ஆர் ராதா கதாநாயகனா அல்லது வில்லனா என்ற குழப்பமே நமக்கு வரும் அதுவரை வந்த படங்களில் யாரும் அது போன்ற ஒரு கேரக்டரில் நடித்ததே இல்லை காரணம் எம் ஆர் ராதா அந்த கதையை நாடகமாக அரங்கேற்றிக் கொண்டு நாடக உலகில் அவர் சூப்பர் ஸ்டாராக இருந்தார் அதனால்தான் இன்று வரை யாராலும் எந்த மொழியிலும் ரத்தக்கண்ணீர் படத்தை தழுவி நடிக்கவும் முடியவில்லை அந்த படத்தின் தழுவளை எடுக்கவும் முடியவில்லை அனைவருமே ஒத்துக் கொண்டார்கள் எங்களால் இந்த அளவுக்கு எல்லாம் நடிக்க இயலாது என்று
அந்தப் படத்தில் வெளிநாட்டு வாசியாக அவர் வந்து இந்தியாவில் இறங்கும் பொழுது மக்களை ஏளனமாக பேசும் பேச்சு தாயை படுதாவை (புடவை) சுத்திக்கிட்டு வந்து நிக்கிற கிராப்பு வெட்டிக்கோ அசிங்கமா பெயரை சொல்லி கூப்பிடுற துரை வந்தாரு துரை போனாருன்னு சொல்லு எனக்கேற்ற அழகான பொண்ணு இந்தியாவிலேயே இல்லை பிரான்சில் ஒரு கிளப்பில் ஒருத்தி இருக்கிறாள் நான் அவளைத்தான் கல்யாணம் பண்ண போறேன் என்று அல்டாப்பாக பேசுவதும்
குஷ்ட நோய்க்கு ஆளான பிறகு அவர் பேசும் தத்துவங்களும் பாடி லாங்குவேஜும் மக்களை வெகுவாக கவர்ந்தது ரத்தக்கண்ணீர் படம் வந்து மிக வெற்றிகரமாக ஓடியும் எம் ஆர் ராதாவிற்கு பட வாய்ப்புகளை வரவில்லை காரணம் அவர் நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு இயக்குனர்களால் இயலவில்லை இன்னொரு பக்கம் பல கதாநாயகிகள் அவருடன் நடிக்கவே பயந்தனர்
ரத்தக்கண்ணீர் படத்தில் ஆரம்பக் காட்சிகளில் மிகவும் ஸ்டைலான ஆங்கில உச்சரிப்புகளை அவர் கையாண்டு இருப்பார் இத்தனைக்கும் எம் ஆர் ராதா அவர்கள் பள்ளி படிப்பை கூட கடக்காதவர் அனைத்துமே இயக்குனர்கள் சொல்லும் வசனங்களை அப்படியே நினைவில் நிருத்தி தன்னுடைய சுய கருத்துக்களையும் வசனங்களையும் சேர்த்து அவர் மிகத் திறமையாக பேசி விடுவார் அது படத்திற்கு மிக சரியாகவும் பொருத்தமாகவும் இருக்கும்
பெரியார் எந்த அளவிற்கு சுயமரியாதை பிரச்சாரங்களை செய்தாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் எம் ஆர் ராதா அவர்களும் நாடகத்தின் வாயிலாக மக்களிடம் அப்போது பிரச்சாரம் செய்தார் அவரது ஒவ்வொரு நாடகமும் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியது
ஒரு நாள் பேசிய வசனங்களை மறுநாள் அதே நாடகத்தில் அவர் பேச மாட்டார் அதனால் ஒரே நாடகமாக இருந்தாலும் மக்கள் பெருமளவு அவரது வசனங்களை கேட்கவே அதிகம் கூடினர்
சிவாஜி எம்ஜிஆர் படங்களில் அவர் நிறைய நடித்திருந்தாலும் ஒரே படத்தில் அப்பா கேரக்டரிலும் அவர்தான் நடித்திருப்பார் வில்லன் கேரக்டரையும் கவனித்துக் கொள்வார் அப்படியே காமெடியையும் பார்த்துக் கொள்வார் இதனால் அவருக்கு அன்றைய காலகட்டத்தில் ஏகப்பட்ட டிமாண்ட்
சிவாஜியும் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கின்றார் ராதா அண்ணனின் நடிப்பை பார்த்து எனக்கே பயம் அவரை விட சற்று நன்றாக நடிக்க வேண்டும் என்று தான் நான் அதிகம் முயற்சி செய்வேன் என்று கதாநாயகர்களையே ஓரங்கட்டி விடும் நடிப்புக்கு சொந்தக்காரராக இருந்தார் அப்போது
எம் ஆர் ராதா
Mylai Kamaru Deen





















