• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழே அறியாத சரோவை வசந்தியாக்குவதற்குள் திண்டாடி நின்ற ஸ்ரீதர்

சினிமா

தமிழே அறியாத சரோவை வசந்தியாக்குவதற்குள் ஸ்ரீதரின் யூனிட் திண்டாடித் தெருவில் நின்றது. 
‘இரண்டு நாள்கள் ஷூட்டிங் முடிந்திருந்தது. ‘எப்படி நம்மப் புதுமுகம்...? ’ என்று கேட்டார் ஸ்ரீதர்.
’எல்லாம் சரி. லேங்வேஜ்தான் ப்ராப்ளம். ’ என்றார் ஒளிப்பதிவாளர் வின்சென்ட்.
‘கொஞ்சம் கொஞ்சமாக வ(மொ)ழிக்குக் கொண்டு வர வேண்டும். ’ என்றார் உதவி டைரக்டர் பி. மாதவன்.
ஒரு ரூபா என்கிற வார்த்தையை ‘வரு ரூபா’ என்பதாக சரோ உச்சரித்தார். ரிகர்சல் பார்த்த ஸ்ரீதர், என்னிடம் சாமியாடினார்.
‘என்னடா நீ முன்னாடியே படிச்சுக் காமிச்ச லட்சணம் இதுதானா...? ’
என்னை முறைத்தவாறே ஸ்ரீதரும், கடைசி வரையில் சரோவின் ‘கொஞ்சும் கிளி’ தமிழைத் திருத்த முயற்சித்துத் தோற்றார்.
ஒத்திகையில் மட்டுமல்லாமல் டேக்கிலும் ‘வரு ரூபா’ என்றே சொல்லி, ஃபிலிமைத் தின்று நாள் முழுவதும் ஏப்பமிட்டார் சரோ.
ஸ்ரீதராலும் சரோவின் சந்தனத் தமிழைத் திருத்த முடியவில்லை என்கிற சந்தோஷத்தில் எனக்குத் தனி குஷி பிறந்தது.
ப்ளைமூத்தில் தாயார் ருத்ரம்மா, சகோதரிகள் சகிதம் கல்யாணப் பரிசு செட்டுக்கு வரும் சரோ, கம்பெனி தரும் ஹோட்டல் டிபனை ஒரு பிடி பிடிப்பார்.
ஸ்டில்ஸ் அருணாச்சலம்- ‘என்ன குழந்தே... தெம்பா இல்ல? ’
ருத்ரம்மா - ‘அது தூங்கப் போனது ரொம்ப லேட்டு. டயலாக் படிச்சது. ’
ஸ்டில்ஸ் ஆனாரூனா - ‘நீங்களும் வாங்கி அப்பப்பப் படிங்க. தமிழ் பொழைக்கும்! ’ ‘சித்ராலயா’ கோபு.
சினிமா உரையாடலை மட்டுமல்ல. கோபுவின் முழுப்பெயர் சடகோபன். அதை ‘ஜடைகோபால்’ என்றே சரோ தவறுதலாக அழைத்தார்.
பி. மாதவன், ஸ்ரீதரிடம் அது பற்றி முறையிட்டார்.
ஸ்ரீதர் - ‘அது அவனுக்குப் பொருந்தும். அவன் ஒன்பதாம் வகுப்பு வரை குடுமி வைத்திருந்தான். ’
சரோ - ‘குடுமின்னா என்னா...? ’

கோபு- ‘ரொம்பப் புத்திசாலி என்று அர்த்தம். ’
தமிழ் தெரியாவிட்டாலும் தன்னை யாராவது கலாய்த்தால் சரோ உஷாராகி விடுவார். அவர்கள் யாராக இருந்தாலும் பதிலடி கொடுக்காமல் விட்டதில்லை.
பின்னர் ஒரு காலத்தில் அந்த கோபால் என்ற உச்சரிப்பில் அந்த கன்னட பைங்கிளியை தமிழ் நாடு அன்றும் இன்றும் மறக்க வில்லை என்பது உண்மையே.
- சித்ராலயா கோபு

 

Leave a Reply