• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிலிப்பைன்ஸில் வெடித்து சிதறிய தால் எரிமலை- 1,200 மீட்டர் உயரத்திற்கு பரவிய சாம்பல் புகைகள்

பிலிப்பைன்ஸின் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள தால் எரிமலையின் பிரதான எரிமலைவாய்ப் பகுதியில் நேற்று எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது. இந்த நீராவி-மக்மா வெடிப்பை பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பினால் எரிமலைவாய்ப் பகுதிக்கு மேலே 1,200 மீட்டர் உயரத்திற்கு கரும் சாம்பல் புகைகள் எழுந்தன.

இந்நிலையில் எரிமலைக்கு அருகில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பைவோல்க்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கண்காணிக்குமாறும், மற்றும் தயார்நிலை குறித்த உள்ளூர் அரசாங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பைவோல்க்ஸின் அதிகாரப்பூர்வ தகவலின் படி இந்த தால் எரிமலையில் ஏற்பட்ட பெரும் வெட்டிபு ஏறத்தாழ நானரை நிமிடங்கள் நீடித்தாக தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் பதிவு செய்த வீடியோ மற்றும் வெப்ப காட்சிப்படங்களை வெளியிட்டனர்.

எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து உடனடியாக குறிப்பிடத்தக்க நில அதிர்வுகளோ அல்லது நில உருக்குலைவு அதிகரிப்புகளோ பதிவாகவில்லை. தற்போது வரை இந்த எரிமலை மீது எச்சரிக்கை நிலை 1-ஐ பராமரித்து வருகிறனர். இந்த எச்சரிக்கையின் கீழ், திடீர் நீராவி உந்துதல் அல்லது நிலத்தடி நீர் வெடிப்புகள், எரிமலை நிலநடுக்கங்கள், சிறிய சாம்பல் வீழ்ச்சி மற்றும் வாயு வெளியேற்றங்கள் ஆகியவை மேலதிக முன்னறிவிப்பின்றி தொடர்ந்து ஏற்படக்கூடும்.

இதனால் தால் எரிமலைத் தீவு ஒரு நிரந்தர அபாய மண்டலமாக நீடிப்பதாகவும், அங்கு நிரந்தரமாகக் வசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தீவிலோ அல்லது எரிமலைவாய்ப் பகுதியிலோ நீண்ட காலம் தங்குவதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
 

Leave a Reply