தாக்குதல்கள் தொடர்ந்தால் இது தான் நடக்கும் - அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்
ஈரானின் இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா நடத்திய அண்மைய தாக்குதல்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் பிரிவை மீறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் தொடர்ந்தால் பேச்சுவார்த்தை செயல்முறைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஈரான், அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
ஈரானின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசின் அனைத்து முக்கிய அதிகார மையங்களும் போர், அமைதி மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான முடிவுகளில் இணைந்து செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், 2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அமெரிக்கா, ஈரானை நடத்திய விதம் விளையாட்டு நியமங்களுக்கு எதிராக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.























