• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நமது எதிர்கால சந்ததியினருக்காக வளமான புங்குடுதீவை உருவாக்க ஒன்றிணைவோம்!

இலங்கை

புங்குடுதீவில் வாழும் எங்கள் உறவுகளின் நலனுக்காகவும், எமது ஊரின் நிலையான முன்னேற்றத்திற்காகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாபெரும் முயற்சியான “கள்ளியாறு திட்டம்” (Kalli Aru Scheme) தற்போது மிகச் சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டு, துரித வேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆக்கபூர்வமான திட்டத்திற்காக சங்கத்தின் வேண்டுதலை ஏற்று, மனப்பூர்வமாகத் தங்களின் ஆதரவையும் அன்பளிப்புகளையும் வழங்கிய அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் எங்களது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதேபோல், இத்திட்டத்தின் பல்வேறு கட்டச் செலவுகளுக்காக தங்களின் பங்களிப்பை வழங்க முன்வந்துள்ள அனைத்து உறவுகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் சமர்ப்பிக்கின்றோம்.
தற்போது கள்ளியாறு பகுதியில் மண் அணை அமைத்தல் (Earthen Bund) மற்றும் நீர் வெளியேற்றக் கட்டமைப்பு (Spill Construction) ஆகிய பணிகள் திட்டமிட்ட வகையில் மிகத் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்திற்கான முறையான பொறியியல் வரைபடங்களும் தொழில்நுட்பத் திட்டமிடல்களும் நீர்ப்பாசனத் திணைக்களம் (Irrigation Department – Kilinochchi Range) மூலம் தயாரிக்கப்பட்டு, அவற்றின் வழிகாட்டலின்படியே அனைத்து பணிகளும் தரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எமது பகுதியில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே இத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்து, மழைநீரைச் சேமித்து எதிர்காலத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிப்பதற்காக எமது சங்க உறுப்பினர்களும் முழு அர்ப்பணிப்புடனும் அயராது உழைத்து வருகின்றனர்.
தாழ்மையான வேண்டுகோள்

இத்திட்டத்திற்காக நிதிப் பங்களிப்பு வழங்குவதாக அன்புடன் உறுதியளித்துள்ள அனைத்து உறவுகளையும், தாங்கள் வாக்குறுதியளித்த பங்களிப்புத் தொகையினை விரைவாகச் செலுத்தி, இப்பணி எவ்விதத் தடையுமின்றி குறித்த காலத்தில் நிறைவேற ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நமது மண்ணின் நீர்வளத்தைப் பாதுகாப்போம்!
நமது எதிர்கால சந்ததியினருக்காக வளமான புங்குடுதீவை உருவாக்க ஒன்றிணைவோம்!
நன்றி.
புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் – கனடா
 

 

Leave a Reply