கண்ணதாசனை அரசவைக் கவிஞராக அறிவித்த எம்ஜிஆர்.
சினிமா
#1949ஆம் ஆண்டு நாமக்கல் கவிஞர் திரு. வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். அதற்குப்பின் அரசவைக் கவிஞரை நியமிக்கும் வழக்கம் கைவிடப்பட்டது.
#1977ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான எம்ஜிஆர் 1978ஆம் ஆண்டு மீண்டும் அரசவைக் கவிஞர் என்ற பதவியை கொண்டு வந்தார்.
#சினிமாவில் தனக்கு நெருங்கிய நண்பராக இருந்த எம்ஜிஆரை விட்டு ஒரு கட்டத்தில் மோதல் ஏற்பட்டு பிரிந்தவர் கண்ணதாசன்.
#தன்னை கடுமையாக விமர்சித்து பல அறிக்கைகள் வெளியிட்டிருந்தாலும், அவரை அரசவை கவிஞராக பணியமர்த்தி அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர். தன்னை விமர்சித்ததால் அதனை சரிக்கட்ட கண்ணதாசனுக்கு வாய்ப்பு கொடுக்கிறார் எம்.ஜி.ஆர் என்ற விமர்சனங்கள் எழுந்தது.
#எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத எம்ஜிஆர் கண்ணதாசன் அந்த பதவியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
#கண்ணதாசன் இறக்கும் வரை அரசவைக் கவிஞர் பதவியில் இருந்தார்.






















