• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீன பட்டாசுத் தொழிற்சாலை வெடிவிபத்து - 21 பேர் உயிரிழப்பு

இலங்கை

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன் 61 பேர் காயமடைந்தனர். 

இதனைத் தொடர்ந்து, முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளதாக அரசு ஊடகங்கள் செவ்வாயன்று (05) செய்தி வெளியிட்டன.

பட்டாசு உற்பத்தி மையமாகத் திகழும் ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவில், உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை சுமார் 4:40 மணியளவில் (0840 GMT) இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக சிசிடிவி மற்றும் சின்ஹுவா செய்திகள் தெரிவிக்கின்றன.

தீப்பரவலை அடுத்து, சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகையின்படி, சுமார் 500 தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர்.

ஹுவாஷெங் பட்டாசு உற்பத்தி மற்றும் காட்சி நிறுவனத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. 

வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய விரைவான விசாரணைக்கும், இந்தச் சம்பவத்திற்கு கடுமையான பொறுப்புக்கூறலுக்கும் சீன ஜனாதிபதி அழைப்பு விடுத்ததாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

சீன இணையதளங்களில் வெளியான காணொளிகளில், இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் சிதறிக் கிடந்த இடிபாடுகளுடன் கூடிய ஒரு பெரிய இடத்திலிருந்து அடர்த்தியான புகை வெளியேறும் காட்சிகளை காட்டின.
 

Leave a Reply