ஹார்முஸ் ஜலசந்தியை பிடிப்பது நடக்காது - அமெரிக்காவை எச்சரிக்கும் ராணுவ நிபுணர்கள்
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் மிதக்கவிட்டுள்ள கண்ணிவெடிகள் (Mines) மற்றும் கரையோரத் தாக்குதல்களை முறியடிப்பது அமெரிக்காவிற்கு ‘கலிபோலி’ (Gallipoli) போரைப் போன்ற ஒரு சவாலாக இருக்கும் என ராணுவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 13, 2026) முதல் ஈரானியத் துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்றுவது என்பது அமெரிக்காவிற்கு பாரிய சவாலாக இருக்கும் என ராணுவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது ஈரான் நடத்தும் சிறிய அளவிலான தாக்குதல்கள் கூட, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை விண்ணைத் தொடச் செய்யப் போதுமானதாக உள்ளது.
தற்போது ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சீனா உள்ளிட்ட சில நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி அளித்துள்ளது. பிற நாட்டு கப்பல்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சீன அடையாளங்களைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மறைமுக ஆதரவுடன் ஈரான் தனது பிடியை வலுப்படுத்தி வருவதால், அமெரிக்காவின் கடற்படை முற்றுகை என்பது ஒரு நீண்டகாலப் போர் நெருக்கடிக்கு இட்டுச் செல்லும் என அஞ்சப்படுகிறது .
இந்த “நிழல் உலக ராணுவத்தின்” பிடியிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தியை மீட்பது அமெரிக்காவிற்கு ஒரு இமாலயச் சவாலாகவே நீடிக்கிறது.





















