• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வச்ச ஒரு இமாலய மிராக்கிள்!

சினிமா

சினிமாவுல ஒரு நடிகருக்கு 54 வயசு ஆயிட்டாலே, 'போதும்ப்பா.. இனிமே குணச்சித்திர வேடத்துல நடிக்கலாம்'னு ஒதுங்கிடுவாங்க. ஆனா, 1982-ல நம்ம 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் செஞ்சது இருக்கே... அது வெறும் சாதனை இல்ல, உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வச்ச ஒரு இமாலய மிராக்கிள்!
அந்த வருஷம் அவருக்கு வயசு 54. ஆனா ரிலீஸான படங்களோட எண்ணிக்கை பதிமூணு! யோசிச்சுப் பாருங்க, ஒரு மாசத்துக்கு ஒரு படம்னு கணக்கு வெச்சா கூட, வருஷத்துக்கு 12 மாசம்தான் இருக்கு. ஆனா தலைவன் 13 படத்தை ரிலீஸ் பண்ணிக் காட்டினாரு.
ஒவ்வொரு படத்துலயும் அந்த மனுஷன் காட்டுன எனர்ஜி இருக்கே, அது இன்னைக்கு இருக்குற இளவட்டங்களுக்குக் கூட வராது!
உலகத்துல எத்தனையோ ஆஸ்கர் அவார்டு வாங்குன ஹாலிவுட் நடிகர்கள் இருக்காங்க. ஆனா, 54 வயசுல, 13 படத்துல ஹீரோவா நடிச்சு, அத்தனையும் ஹிட் குடுத்த ஒரு நடிகனை நீங்க உலகத்துல வேற எங்கேயாவது பார்க்க முடியுமா? சான்ஸே இல்ல! அந்த ஒரு வருஷம் சிவாஜி சார் ஓடுன ஓட்டம், ஒரு தனி மனிதனோட ஓட்டம் இல்ல... அது நடிப்பின் சக்ரவர்த்தியோட விஸ்வரூபம்!
அந்த 1983-ல நடந்த அந்த மேஜிக்கைப் பத்திதான் இந்தபதிவுலே நாம விலாவாரியா பார்க்கப்போறோம்..."
காலைல ஒரு செட், மதியம் ஒரு செட், ராத்திரி ஒரு செட்னு 54 வயசுலயும் தூக்கம் இல்லாம நடிச்ச அவரோட டெடிகேஷன்.
கதாபாத்திர வித்தியாசம்: போலீஸ் ஆபீசர், தாதா ,அரசு பதிவாளர் ,பிராமணர்,கிராமத்தான் என 13 படங்களையும் வெரைட்டியா செஞ்சிருப்பார்.
அந்த 13 படங்கள் என்னென்ன
அந்தப் படத்தோட சிறப்பு அம்சங்கள் என்னென்ன அப்படிங்கற விவரங்களையும் இந்த வீடியோல இப்ப நாம பாக்கலாம் .
1..1982 ஆம் வருச முதல் வெளியீடா 'ஹிட்லர் உமாநாத்' படம் .ரிலீஸ் தேதி 26.1.1982
இதுல சிவாஜி 'உமாநாத்'னு ஒரு ரொம்ப அமைதியான மனுஷனா நடிச்சிருப்பாரு. ஆனா மத்தவங்க அவரை ஏமாத்துறாங்கன்னு தெரிஞ்சதும், 'ஹிட்லர்' மாதிரி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான ஆளா மாறி எல்லாரையும் அதட்டுவாரு. அந்த ரெண்டு வித்யாசத்தையும் நடிப்புல தூள் கிளப்பியிருப்பாரு.

இந்தப் படத்தோட கதையை எழுதினது டைரக்டர் மகேந்திரன். அதனாலயே கதை ரொம்ப எதார்த்தமா, ஒரு மனுஷனோட மனசு எப்படி மாறுதுன்னு சூப்பரா இருக்கும்.
அப்போ சத்யராஜ் சினிமாவுக்குள்ள வந்த புதுசு. இதுல அவர் ஒரு சின்ன ரோல் பண்ணியிருப்பாரு.
படத்துல சிவாஜியை பார்த்து எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. அதனாலயே அவர் ஹிட்லர் மாதிரியே மாறிடுவாரு. ஆனா கடைசில அந்த அதிகாரம் சரி வராதுன்னு புரிஞ்சுப்பாரு.
படத்துக்கு மௌலி தான் திரைக்கதை. அதனால அங்கங்கே விறுவிறுப்பும், காமெடியும் கலந்து நல்லா இருக்கும்.
மொத்தத்துல, "அடங்கிப்போறவன் அதட்ட ஆரம்பிச்சா எப்படி இருக்கும்?" அப்படிங்கிறதுதான் இந்த ஹிட்லர் உம்மாநாத்.
2.இந்த வருஷம் வந்த இரண்டாவது படம்
'ஊருக்கு ஒரு பிள்ளை'. 1982-ல பிப்ரவரி 5-ஆம் தேதி ரிலீஸ் ஆச்சு.
'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன்.
ஜோடி: அவருக்குப் பொருத்தமா கே. ஆர். விஜயா நடிச்சிருந்தாங்க.
மத்தவங்க: எம். என். நம்பியார், மேஜர் சுந்தரராஜன், வி. கே. ராமசாமி-ன்னு அந்த காலத்து பெரிய ஸ்டார் பட்டாளமே இதுல உண்டு.
டைரக்ஷன்: டி. யோகானந்த்
மியூசிக்
இசை யாருன்னு பாத்தீங்கன்னா, மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன். கண்ணதாசன் வரிகள்ல பாடல்கள் நல்லா இருக்கும்.
படம் எப்படின்னா ...
ஊர் மேல ரொம்ப அக்கறை உள்ள, மத்தவங்களுக்கு உதவி செய்ற ஒரு மனுஷனை சுத்திதான் கதை போகும்.
சிவாஜி செம எதார்த்தமா, ஒரு குடும்பத் தலைவரா நடிச்சிருப்பார். 80-கள்ல அவர் நடிச்ச நல்ல குடும்ப படங்கள்ல இதுவும் ஒன்னு.
பெரிய ஆக்ஷன் சீன்லாம் இல்லாம, மனசுக்கு நெருக்கமான ஒரு எமோஷனல் டிராமாவா இந்தப் படம் இருக்கும்.
3.1982, பிப்ரவரி 6-ஆம் தேதி ரிலீஸான படம் "வா கண்ணா வா".
இது ஒரு அழகான குடும்பக் கதை. நம்ம சிவாஜி கணேசனும், சுஜாதாவும் வயசான தம்பதிகளா (நாயுடு - பாப்பா) நடிச்சிருப்பாங்க. இவங்களுக்குக் குழந்தை கிடையாது, ஆனா ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரையே வச்சிருப்பாங்க.
அப்போ அந்த வீட்டுக்கு ஜெய் கணேஷும், வடிவுக்கரசியும் வாடகைக்கு வர்றாங்க. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க. அவங்களுக்குக் குழந்தை பிறந்ததும், அந்தப் பாப்பாவை நம்ம சிவாஜி-சுஜாதா தம்பதி தங்களோட சொந்தப் பேரன் மாதிரியே நினைச்சு வளர்ப்பாங்க. ஆனா ஒரு கட்டத்துல அந்த இளந்தம்பதிகள் குழந்தையைத் தூக்கிட்டுப் போகும்போது நடக்குற சென்டிமென்ட் தான் கதையே. கடைசில ரொம்ப உருக்கமா படம் முடியும்.
இதுல சிவாஜி ஒரு ஜாலியான அதேசமயம் பாசமான பெரியவரா வர்றது பாக்கவே சூப்பரா இருக்கும். சுஜாதாவோட அந்த 'பாப்பா' ரோலும் ரொம்ப பிரபலம்.
இயக்கம்: இத டி. யோகானந்த் இயக்கியிருந்தாரு.
இசை: நம்ம எம்.எஸ்.வி தான் மியூசிக். இதுல வர்ற "கண்ணிரண்டில் மையெழுதி...", "புஷ்பங்கள் பால் பழங்கள்..." பாட்டெல்லாம் இன்னைக்கும் எவர்கிரீன் ஹிட்ஸ்!
மத்த ஆக்டர்ஸ்
நாகேஷ், ஒய்.ஜி. மகேந்திரன், வி.கே. ராமசாமி, மேஜர் சுந்தரராஜன்னு ஒரு பெரிய கூட்டமே இதுல நடிச்சிருக்காங்க.
இது சிவாஜி புரொடொக்சன் தயாரிப்பு .100 நாள் ஓடி ஹிட்டான படம்.
4.அடுத்து 'கருடா சௌக்யமா' 25.2.1982 ரிலீஸ்.சாதாரண மனுச ன் எப்படி நிழலுலக தாதாவாக (Don) மாறுகிறான் என்பதே கதை. சிவாஜி இதில 'தீனதயாளன்' என்ற பவர்ஃபுல் கேரக்டரில் நடிச்சிருப்பார்.
இந்தப் படத்தை இயக்கியது கே.எஸ். பிரகாஷ் ராவ். ஆனால், கதை மற்றும் வசனத்தை 'வியட்நாம் வீடு' சுந்தரம் எழுதினார். அதனால தான் படத்தில வசனங்கள் மிகவும் கூர்மையாக இருக்கும்.
சிவாஜி மற்றும் சுஜாதாவுடன் இணைஞ்சு, அந்த காலக்கட்டத்தின் இளம் ஹீரோக்களான மோகன் மற்றும் தியாகராஜன் (நடிகர் பிரசாந்தின் தந்தை) ஆகியோரும் இதில் நடிச்சிருந்தாங்க.. தியாகராஜன் இதில் 'முத்துகிருஷ்ணன்' என்ற முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். அம்பிகா சிவாஜியின் மகளாக நடித்திருப்பார்.
இசை எம்.எஸ். விஸ்வநாதன். "சந்தன மலரின் சுந்தர வடிவில்" (SPB பாடியது), "மொட்டு விட்ட வாசனை" கீதைசொல்ல கண்ணன் வந்தான்போன்ற பாடல்கள் இந்தப் படத்தில் சிறப்பு.
சிவாஜியின் மாறுபட்ட 'தாதா' நடிப்புக்காக இந்தப் படம் அப்போது கவனிக்கபட்டது
5.அடுத்து சங்கிலி 14.4. 1982-ல ரிலீஸ் ஆச்சு. இதுல நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரெண்டு வேஷத்துலே கலக்கியிருப்பாரு. ஒருத்தர் ரொம்ப சின்சியரான போலீஸ் ஆபீசர் 'சங்கிலி', இன்னொருத்தர் ஜெயில்ல இருக்குற முரட்டுத்தனமான 'காளி'.
கதைப்படி, போலீஸ் சங்கிலி கொலை செய்யப்படுவாரு. அந்த கொலையாளிகளைப் பிடிக்கணும்னா, அதே உருவத்துல இருக்குற காளியை போலீஸ் வேஷம் போட வச்சு வில்லன்களைப் பிடிக்கிறதுதான் இந்த படத்தோட செம மாஸான கதை. இது ஹிந்தில வந்த 'காலிச்சரண்' படத்தோட ரீமேக்.
இளைய திலகம் பிரபு அறிமுகமான முதல் படம் .
ரெண்டு பேரையும் ஸ்கிரீன்ல ஒண்ணா பாத்தது மாஸா இருந்துச்சு.
அமைதியான போலீஸ் அதிகாரிக்கும், அக்ரோஷமான காளிக்கும் நடுவுல சிவாஜி காட்டுன அந்த நடிப்பு வித்யாசம் செமையா இருக்கும்.
எம்.எஸ். விஸ்வநாதன் மியூசிக்.
ஸ்டார் காஸ்டிங்: ஸ்ரீப்ரியா, சுமித்ரா நம்பியார் ,மனோகர், மேஜர் சுந்தரராஜன்னு ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இதுல நடிச்சிருப்பாங்க.
மொத்தத்துல, 'சங்கிலி' படம் ஒரு பக்காவான ஆக்ஷன் மசாலா படம். அந்த காலத்துல இந்த படம் தியேட்டர்ல நல்லாவே ஓடுச்சு.
6. 'வசந்தத்தில் ஒரு நாள்' 7.5.1982.இது ஹிந்தியில் வந்த 'மௌசம்' பட ரீமேக் .
இளமை காலத்துல தான் காதலிச்ச பெண்ணைத் தேடி வர்ற ஒரு முதிர்ச்சியான கேரக்டர் அவருக்கு.
இதுல ஸ்ரீபிரியா ரெண்டு வேஷம் பண்ணிருப்பாங்க. ஒன்னு சிவாஜியோட பழைய காதலி, இன்னொன்னு அவரோட மகள் அந்த காலத்துல ஒரு போல்டான கேரக்டர்ல அவங்க மிரட்டியிருப்பாங்க.
தப்பான இடத்துல வளர்ந்த தன்னோட பொண்ணை, அவரோட அப்பான்னு சொல்லாமலேயே திருத்தி ஒரு நல்ல வாழ்க்கைக்குக் கொண்டு வர சிவாஜி போராடுறது தான் படத்தோட எமோஷனல் ஹைலைட்.
ரொம்ப டேஞ்சரான இந்த கதையில நடிக்கிறதுக்கு ஒரு தைரியம் வேணும்.
7.அடுத்து 'தீர்ப்பு' 21.05.1982 -
சிவாஜி - சுஜாதா ஜோடி.
கே பாலாஜி தயாரிப்பு. சிவாஜி இதுல ஐ.ஜி. ராஜசேகர் அப்படிங்கிற பவர்ஃபுல் போலீஸ் அதிகாரியா வருவாரு. அவரோட அந்த கம்பீரமான போலீஸ் யூனிபார்ம், நடை, அந்த மிடுக்கு எல்லாமே அப்போ செம்ம மாஸா இருந்துச்சு.
படத்துல விஜயகுமார், சரத்பாபு,சுதர்சன் ஜெய்சங்கர் , என இவங்க எல்லாரும் சேர்ந்து கதையை ரொம்ப விறுவிறுப்பா கொண்டு போயிருப்பாங்க.
சிவாஜி திரைப்பயணத்துல 225-வது படம்ங்கிறது ஒரு பெரிய மைல்கல். அதை ஒரு பக்கா போலீஸ் ஸ்டோரியா கொடுத்து, ரசிகர்களைத் தியேட்டருக்கு வரவழைச்சு பெரிய ஹிட் அடிச்சாங்க.
இந்த படம் வெள்ளி விழா ஓடி சாதனை செஞ்ச படம்.
ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, தன் கடமைக்கும் குடும்பத்துக்கும் இடையில வர்ற போராட்டத்தை எப்படிச் சமாளிக்கிறாருங்கிறதுதான் இதோட மெயின் ஹைலைட்.
8.அடுத்து 'தியாகி' 3.9.1982 ரிலீஸ். இது ஒரு அதிரடியான 'க்ரைம் த்ரில்லர்' படம். சிவாஜி ஐ.ஜி. கணேஷ் (IG Ganesh) என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியா நடிச்சிருப்பாரு.
இரட்டை வேடம் . ஐ.ஜி. கணேஷ் ஒரு பெரிய குற்ற கும்பலை பிடிக்கிறதுக்காக, அவரோட உருவ ஒற்றுமை கொண்ட 'கன்வர்லால்' அப்படிங்கிற ஒரு கொடூரமான தாதாவா மாறி அவங்க கூட்டத்துக்குள்ள ஊடுருவி வில்லன்களை பிடிக்கறது தான் கதை
'கன்வர்லால்' கேரக்டர்ல சிவாஜி காட்டுற அந்த முரட்டுத்தனமும், ஸ்டைலும் படத்தோட ஹைலைட்.
நாட்டுக்காகவும், கடமைக்காகவும் தன்னோட குடும்பத்தையே இழந்து, கடைசியில சட்டமே அவருக்குக் கைகொடுக்காத போது அவர் எடுக்கிற விஸ்வரூபம் தான் கிளைமாக்ஸ்.
மற்ற நடிகர்கள்: சுஜாதா, ஸ்ரீப்ரியா, கீதா, மேஜர் சுந்தரராஜன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதுல இருக்கு.
சொல்லணும்னா, அந்த காலத்துல சென்சார் போர்டு இந்தப் படத்துக்கு நிறைய முட்டுக்கட்டை போட்டாங்க, ஏன்னா அவ்வளவு ஆக்ஷன் மற்றும் வன்முறை காட்சிகள் இதுல இருந்துச்சு.
9.அடுத்து 12.9,.1982-ல ரிலீஸான "நிவுரு கப்பின நிப்பு" .தெலுங்கு படம்.
இந்த படம் சிவாஜி தெலுங்குல நேரடியா நடிச்ச ஒரு முக்கியமான படம். இதுல தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா ஹீரோவா நடிச்சிருப்பாரு.
அப்போ தெலுங்குல இது ஒரு பெரிய காம்பினேஷன்.
இதுல சிவாஜிக்கு ரொம்பவே கம்பீரமான ரோல்.
சிவாஜி சாருக்கும் நடிகர் கிருஷ்ணாவுக்கும் இடையில வர்ற சீன்ஸ் எல்லாமே செம வெயிட்டா இருக்கும்.
சிவாஜிக்கு தெலுங்கு புதுசு கிடையாது (ஏற்கனவே நிறைய படங்கள் பண்ணியிருக்காரு), ஆனாலும் அந்த மொழியிலயும் அவரோட நடிப்பும், பாடி லாங்குவேஜும் படத்துக்கு பெரிய பிளஸ்ஸா அமைஞ்சது.
சுருக்கமா சொல்லணும்னா, "நிவுரு கப்பின நிப்பு" (அப்படின்னா "நீறு பூத்த நெருப்பு"ன்னு அர்த்தம்) - தலைப்புக்கு ஏத்த மாதிரியே சிவாஜி சாரோட நடிப்பு இந்த படத்துல நெருப்பா இருக்கும்!
10...10 10.1982-ல ரிலீஸான 'துணை' .
நடிகர் திலகம் சிவாஜியோட பர்த்டே தேதி அன்னைக்கு வெளியான ஒரே ஒரு படம் இதுதான்.
இந்த படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரோட நடிப்புல ஒரு வித்தியாசமான பரிமாணத்தை காட்டின படம்னு சொல்லலாம்.
இந்தப் படத்த துரை இயக்கியிருந்தாங்க.
சிவாஜி எத்தனையோ மாஸ் படங்கள் பண்ணியிருந்தாலும், இது அவரோட "நடிப்புத் தீனிக்கு" ஒரு நல்ல எக்ஸாம்பிள். ஒரு மனுஷன் வயசான காலத்துல படுற கஷ்டத்தையும், அவருக்கு கிடைக்க வேண்டிய அன்பையும் பத்தி இந்த படம் பேசுது.
சிவாஜி மகனா சுரேஷ் மருமகளா ராதாவும் நடிச்ச படம்.
11.அடுத்து 14.11. 1982-ல வந்த "பரிட்சைக்கு நேரமாச்சு".
இதுல வர்ற 'நடிகர் திலகம்' நடிப்பு இன்னைக்கும் பல பேருக்குப் ஃபேவரிட்.
இந்த படம் ஒரு அப்பாவுக்கும் (சிவாஜி) அவரோட மகனுக்கும் (ஒய். ஜி. மகேந்திரன்) இடையில இருக்குற அழகான, அதே சமயம் உருக்கமான கதையச் சொல்லுது. தன் பையன் கலெக்டர் ஆகணும்னு ஆசைப்படுற ஒரு சராசரி அப்பாவோட கனவு தான் கதை.
இதுல சிவாஜி ஒரு பிராமண வீட்டுப் பெரியவரா நடிச்சிருப்பாரு. அவரோட பேச்சு வழக்கு , அந்த வேட்டி கட்டிக்கிட்டு வர்ற ஸ்டைல் எல்லாம் ரொம்ப நேர்த்தியா இருக்கும். ரொம்ப ஆர்ப்பாட்டம் இல்லாம, ஒரு எதார்த்தமான அப்பாவா வாழ்ந்திருப்பாரு.
சிவாஜி கூட போட்டி போட்டுக்கிட்டு ஒய். ஜி. மகேந்திரன் நடிச்ச முக்கியமான படம் இது. இது அவரோட கரியர்ல ஒரு மைல்கல்.
படத்தோட கிளைமாக்ஸ் பார்த்தா கண்ணுல தண்ணி வராத ஆளே இருக்க முடியாது. "
டைரக்டர் முக்தா சீனிவாசன் ஒரு அழகான நாடகத்தை படமா மாத்தியிருப்பாரு. வீணான பில்டப் இல்லாம, கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் சொல்லி மனசத் தொடுற மாதிரி எடுத்திருப்பாரு.
சுருக்கமா சொல்லணும்னா: இன்னைக்கு இருக்கிற ஸ்டூடண்ட்ஸ், பேரண்ட்ஸ் எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய ஒரு படம் இது.
12.அடுத்து 1982-ல வந்த "ஊரும் உறவும்" .ரிலீஸ் தேதி 14.11.1982.
இந்த படம் வழக்கமான ஒரு குடும்பப் படம் கிடையாது. இது முழுக்க முழுக்க மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும், அவங்க சந்திக்கிற போராட்டங்களையும் பத்தின ஒரு வித்யாசமான கதைக்களம்.
யாரெல்லாம் நடிச்சிருக்காங்க?
இந்தப் படத்துல ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கு:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்: இவர்தான் இந்தப் படத்தோட ஆணிவேர். ஒரு மலைவாழ் இனத் தலைவரா நடிச்சிருப்பாரு.
கே.ஆர். விஜயா: சிவாஜிக்கு ஜோடியா, அந்த மக்களோட உணர்வுகளைப் புரிஞ்சிக்கிட்ட ஒரு பாசமான மனைவியா நடிச்சிருப்பாங்க.
மேஜர் சுந்தரராஜன் & தேங்காய் நிழல்கள் ரவி மற்றும் பலரும்
படத்துல ரொம்ப முக்கியமான கனமான கதாபாத்திரங்கள்ல நடிச்சு கதையை நகர்த்துவாங்க.
இந்தப் படத்துல சிவாஜியைப் பார்க்கவே புதுசா இருக்கும். அந்த மக்களுக்கே உரிய வித்யாசமான தலைமுடி அலங்காரம், ஆடைன்னு ஒரு நிஜமான மலைவாசித் தலைவர் மாதிரியே மாறியிருப்பாரு.
ஸ்டுடியோ செட் போடாம, நிஜமான அருவி, அடர்ந்த காடு, மலைப் பகுதிகள்ல ஷூட்டிங் எடுத்திருப்பாங்க. இயற்கை அழகை இவ்வளவு அழகா கேமராவுல பிடிச்சது பெரிய விஷயம்.
அந்த மக்களோட வித்யாசமான திருவிழாக்கள், சடங்குகள், அவங்க கும்பிடுற தெய்வங்கள்னு அவங்களோட ஒட்டுமொத்த வாழ்வியலையும் ரொம்ப தத்ரூபமா காட்டியிருப்பாங்க.
இசை: சங்கர்-கணேஷ் இசை அமைச்சிருப்பாங்க. அந்த மண்ணோட வாசனை மாறாம பாடல்கள் எல்லாம் ஒரு வித்யாசமான ஃபீல் கொடுக்கும்.
மொத்தத்துல, "ஊரும் உறவும்" படம் சிவாஜி கணேசனோட நடிப்புப் பசிக்குத் தீனி போட்ட ஒரு முக்கியமான படம். காடுகளையும், அங்க வாழ்ற மக்களோட உரிமையையும் பேசுன ஒரு நேர்மையான முயற்சி இது.
13.அடுத்து 1982-ல சிவாஜி நடிச்ச கடைசி படம் நெஞ்சங்கள்.
10.12.1982 ரிலீஸ்.இந்தப் படத்தை பிரபல நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் இயக்கியிருக்காரு, நடிகர் விஜயகுமார் தயாரிச்ச படம்..
நடிப்பு: நடிகர் திலகம் சிவாஜி கணேசன், லட்சுமி, மஞ்சுளா,தியாகராஜன் ,YG.மகேந்திரன் மற்றும் விஜயகுமார்னு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதுல நடிச்சிருக்காங்க.
இன்னைக்கு நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச நடிகை மீனா, இந்தப் படத்துலதான் 'பேபி மீனா'வா குழந்தை நட்சத்திரமா அறிமுகமானாங்க. அவங்களோட சினிமா பயணத்துக்கு இதுதான் முதல் படி.
"என்ன நண்பர்களே... லிஸ்ட்டை பார்த்தீங்களா? 54 வயசுல, ஒரே வருஷத்துல 13 படங்கள்! இது வெறும் நம்பர் கிடையாது, இதுதான் 'நடிகர் திலகத்தின்' அசுர வேகம்!
சிவாஜி பண்ணது ஒரு 'ஒன் மேன் ஆர்மி' ஷோ. ஒரு பக்கம் போலீஸ் யூனிஃபார்ம் போட்டு கெத்து காட்டுறது, இன்னொரு பக்கம் 'பரிட்சைக்கு நேரமாச்சு'ல ஒரு எதார்த்தமான அப்பாவா உருக வைக்கிறது, அப்புறம் 'ஊரும் உறவும்'ல ஒரு மலைவாழ் தலைவரா மிரட்டுறதுன்னு... மனுஷன் வெரைட்டிலயும் விஸ்வரூபம் எடுத்திருக்காரு.
அந்த வயசுலயும் தூக்கம் இல்லாம, ஓய்வு இல்லாம அவர் ஓடுன அந்த ஓட்டம்தான் இன்னைக்கு வரைக்கும் பல நடிகர்களுக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன்.
சிவாஜி கணேசன் அப்படிங்கிற அந்த சகாப்தம் படைச்ச இந்த 13 படங்களோட மேஜிக்கை நாம என்னைக்குமே மறக்க முடியாது. அந்த நடிப்புச் சக்ரவர்த்தியோட இந்த 'இமாலய சாதனை' பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? இந்த 13 படங்கள்ல உங்களோட ஆல்-டைம் ஃபேவரைட் எது? அதை மறக்காம கீழ கமெண்ட்ல சொல்லுங்க.

 

செந்தில்வேல் சிவராஜ் 

Leave a Reply