மாயக்குரலோன் பாடும் நிலா SPB அவர்களின் நினைவாக அவரது சிலை திறப்பு நிகழ்வு
சினிமா
* மாயக்குரலோன் பாடும் நிலா SPB பாலுவை கொண்டாடும் விதமாகவும் அவரது இசைப்பணியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் விதமாகவும் கேரள திரைப்பட பின்னணி பாடகர்கள் சங்கமான 'சமம்' மற்றும் ஜாய் ஆலுக்காஸ் கூட்டு முயற்சியில், SPB நினைவாக அவரது சிலை திறப்பு நிகழ்வு பாலக்காடு அருகே நேற்று மாலை சிறப்பாக நடந்தது.
* கோவை --- கொச்சி தேசிய
நெடுஞ்சாலையில், பாலக்காடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகே பட்டத்திரிப்பாடு நினைவகத்தில், கண்ணுாரை சேர்ந்த சிற்பி கானாயி உன்னி தத்ரூபமாக வடிவமைத்த பத்தடி உயரமுள்ள பாடகர் SP பாலசுப்ரமணியத்தின் சிலையை, ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் MM கீரவாணி திறந்து வைத்தார்.
*மலையாளத் திரைப்படப் பாடகர்கள் சங்கமான 'சமம்' மாலை 6 மணிக்கு 'சங்கீத மேகம்' எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியையும் நடத்தியது., 30க்கும் மேற்பட்ட பிரபல கலைஞர்கள் பங்கேற்றனர். மக்கள் மனம் கவர்ந்த SPB பாடல்களை அழகுற மாலைபோல கோர்த்து அற்புதமாக வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 3000 பேர் கலந்துகொண்டனர்.
*பாடகர் விஜய் யேசுதாஸ் பரபரவென இயங்கி இந்த விழாவை மிக சிறப்பாக முன்னெடுத்து, ஒருங்கிணைத்தார்.
*எஸ்பிபி-யின் புகழை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் முயற்சியாக நடைபெற்ற விழாவில்
ஹரிஹரன், மனோ, சித்ரா, ஸ்ரீனிவாஸ், சுஜாதா, பாலக்காடு ஸ்ரீராம், மது பாலகிருஷ்ணன், உன்னி மேனன்,அனூப் சங்கர் என வரிசைகட்டி பிரபல பாடகர்கள் கலந்து கொண்டு பாடினர்.
*மூன்று மணி நேரம் இடைவிடாத SPB இசை சங்கம நிகழ்ச்சியில் இளையராஜா,ரஹ்மான்,கீரவாணி, MSV பாடல்கள் மற்றும் மலையாள இந்தி பாடல்களை பாடி ரசிகர்களை ஆனந்த கடலில் மூழ்க வைத்தனர்.
* SPB குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பும் , தென்னிந்திய பாடகர்களை ஒருங்கே சந்திக்கும் அருமையான வாய்ப்பும் எனக்கு அமைந்தது. தீவிர இசை நட்புகள் மூவரோடு இந்த நீண்டநாட்கள் நினைவில் தங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றது பெரும் பாக்கியமாக அமைந்தது.
Suresh Adithya






















