• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நேற்று இன்று நாளை....

சினிமா

 உண்மை என்றைக்கும் சாகாது, அது சிரஞ்சீவித்தனமானது என்பதை நடக்கும் சில விஷயங்கள் காலகாலமாக நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன என்று சொன்னால் அது மிகையில்லை,
சமீபத்தில் தினமணி கதிரில் வெளிவந்த இயக்குனர் காரைக்குடி நாராயணன் அவர்களின் பேட்டியை பதிவு செய்த தலைவரின் தீவிர பக்தர் திரு. லோகநாதன் அவர்களுக்கு நம் நன்றிகள்,
அதை மீண்டும் நம் தலைவரின் தளமான " நடிகப் பேரரசர் கலைக் குழுவில் பதிவிட்ட திரு. சங்கர் சாருக்கும் நம் நன்றிகள்,
இன்றைக்கு வரைக்கும் தலைவரின் " நேற்று இன்று நாளை " படத்தின் தயாரிப்பாளர் அசோகன் அவர்களைப் பற்றி சில கணேசனின் சில்வண்டுகள் தவறான தகவல்களை பரப்பிக் கொண்டே இருப்பார்கள்,
நாம் மீண்டும் மீண்டும் சரியான தகவல்களைக் கொடுத்தாலும் எருமை மாட்டில் மழை பெய்வது மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள்,
அது அவர்களுக்கு கை வந்த கலை,
ஆனால் நேற்று இன்று நாளை திரைப் படத்தின் வெற்றி என்பது தலைவரின் வசூல் சக்கரவர்த்தி என்னும் மகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரக் கல் என்பதை அசோகனின் மகன் வின்சென்ட் அசோகனே பல பேட்டிகளில் சொல்லி விட்டார்,
போதாக் குறைக்கு இன்றைக்கு வரைக்கும் அந்தக் குடும்பத்துக்கு வருமானத்தை அள்ளித் தரும் அட்சய பாத்திரமாக நேற்று இன்று நாளை இருப்பதை வின்சென்ட் அசோகன் பெருமையுடன் சொல்கிறார்,
நேற்று இன்று நாளை படத்தின் வெற்றி வீச்சு எப்படிப்பட்டது என்றால் தமிழகத்தின் பல நகரங்களில் இந்த நாதாரிகளால் கடைசி நாள் வரை ஹவுஸ் புல் போர்டு போட்டு ஓஓஓஓஓட்டிய " தங்கப் பதக்கம் " படத்தை தகரப் பதக்கமாக்கி ஓட ஓட விரட்டிய பெருமை அந்தப் படத்திற்கு உண்டு,
அதிலும் குறிப்பாக எங்கள் குமரியிலும் சவுத்ரி சார் டவுசர் கிழிந்து தொங்கும் அளவுக்கு😄😄😄😄😄😄😄😄😄😄 நேற்று இன்று நாளையிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்,
வசூலில் தலைவரிடம் தோல்வி அடைந்த தங்கப் பதக்கத்தை " தகரப் பதக்கம் " என்று சொல்லி கிண்டல் அடித்து போஸ்டர் ஒட்டினார்கள் நாகர்கோயில் " உதயசூரியன் மக்கள் திலகம் " மன்றத்தார் 😀😀😀😀😀😀😀😀😀,
இன்றைக்கு காரைக்குடி நாராயணன் அவர்கள் கொடுத்த பேட்டியிலும் அசோகன் சொன்ன உண்மைகளை அப்படியே சொல்லி கணேசன் குஞ்சுகளுக்கு செருப்பாலேயே மூஞ்சி மூஞ்சியா கொடுத்திருக்கார் 😀😀😀😀😀😀,
அசோகனின் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள கட்டிடங்கள், சொத்துகள் எல்லாம் தலைவர் வாங்கிக் கொடுத்தது என்பதை இந்த காரைக்குடி நாராயணனை காரில் கூட்டிப் போய் காட்டியிருக்கிறார் அசோகன்,
அது மட்டுமல்ல தலைவர் படங்களில் நடிக்கும் போது ஒரு நாள் நடித்தாலும் ஒரு லட்ச ரூபாய் அசோகனுக்கு தலைவர் சம்பளமாக கொடுத்ததை சொல்லி " அச்சாணி, அன்பே சங்கீதா படங்களுக்கும் அதே சம்பளம் கேட்டிருக்கிறார் அசோகன்,
இந்த அசோகன் எந்த அளவுக்கு தலைவரின் அன்புக்கு பாத்திரமாய் இருந்திருக்கிறார் என்பதை இதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம்,
கட்சிப் பணிகளால் நேற்று இன்று நாளை படம் தாமதமானாலும் படம் வெளியாகி பெருத்த லாபத்தை கொடுத்ததையும் நினைவு கூர்ந்திருக்கிறார் அசோகன் அவர்கள்,
நேற்று இன்று நாளை படம் தொடங்கிய போதே தலைவர் சொல்லியிருக்கிறார்
" கட்சிப் பணிகளையும் பார்த்துக் கொள்வதால் படம் முடிவதில் சில சிரமங்கள் ஏற்படலாம் " என்பதை சொன்னபோது அதைப் பற்றி பிரச்சனையில்லை என்று தலைவருக்கு ஆள் உயர மாலையைப் போட்டு காலில் விழுந்தவர் அசோகன்,
ஆனால் கட்சிப் பணிகளால் படம் தாமதமானவுடன் " சில " பேரின் தூண்டுதலின் பேரில் அசோகன் தலைவரை விமர்சிக்கத் தொடங்கினார்,
ஒரு கட்டத்தில் படத்தின் பைனான்சியர் பின் வாங்கிக் கொள்ள அசோகன் நிலை அறிந்து இரவோடு இரவாக அசோகன் யார் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கியிருந்தாரோ அத்தனையையும் அடைத்து படத்தின் பொறுப்பை தானே எடுத்து படப் பிடிப்பை முடித்து படத்தை வெளியிட ஏற்பாடும் செய்தவர் தலைவர்,

படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் குவித்த போதும் கூட தன் சம்பளத்தில் பெரும்பகுதியை வாங்காமலே விட்டு விட்டார் தலைவர்,
ஆனால் இந்த விவரங்களை தன் வாழ்நாள் முழுதும் எங்கேயும் சொல்லிக் காட்டாதவர் நம் தங்கம்,
மேற்கண்ட தகவல்களை வின்சென்ட் அசோகன் சொன்ன பிறகுதான் நமக்கே தெரியும்,
தலைவரின் தாயுள்ளம் எப்படிப் பட்டது என்பதை காரைக்குடி நாராயணன் அவர்கள் சொல்லும் போதே நமக்கு கண்களில் கண்ணீர் முட்டுகிறது,
இவர் அசோகனைப் பார்க்க விஜயா ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்த போது தன்னை விமர்சித்த அசோகனின் நன்றி கெட்டத்தனம் ஒருபக்கம் இருந்தாலும் ஜானகி அம்மையாரை விஜயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ஒரு பெரிய தொகையை கொடுத்துவிட்டு அவரையும் பார்த்து விட்டு வரச் சொல்லியிருக்கிறார் என்றால் தலைவர் எப்படிப் பட்ட உயர்ந்த உள்ளதுக்கு சொந்தக்காரர் என்று நமக்கே மலைக்க வைக்கிறது,
" பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே " என்னும் வார்த்தை தலைவருக்காகவே எழுதியிருப்பார்கள் போலும்,
இதே போலத்தான் நடிகர் சந்திரபாபுவும் " மாடி வீட்டு ஏழை " படத்தின் போது உண்ட வீட்டுக்கே ரண்டகம் செய்யத் துணிந்த போது அதற்கான தண்டனையை தலைவர் கொடுத்தார் அதுதான் உண்மை,
அந்தப் படத்துக்காக சந்திரபாபு தலைவருக்கு அட்வான்ஸ் கொடுத்த பணம் கூட அவரின் பணம் அல்ல, நடிகை சாவித்திரி கொடுத்தது,
படம் நின்றவுடன் பழியை தலைவர் மேல் சுமத்திய பிறகும் சந்திரபாபு துரோகம் செய்த குடும்பத்தின் பெயர் கெட்டுப் போகக்கூடாது என்று இறுதி வரை அதை வெளியே சொல்லாதவர் தலைவர்,
25 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் சந்திரபாபு கொடுத்தார் என்றால் அதைவிட பல மடங்கு சம்பளத்தை வேண்டுமென்றே " அடிமைப் பெண், பறக்கும் பாவை, கண்ணன் என் காதலன் படங்களில் நடிக்க வைத்து கொட்டிக் கொடுத்தார் தலைவர்,
கூடவே கிறிஸ்மஸ் பண்டிகையின் போது கேக்கும், பெரும் பணத்தையும் பாபுவுக்கு கொடுத்து அனுப்பியவர் தலைவர்,
ஆனால் இதையெல்லாம் மறந்து கணேசன் ஒன்றிரண்டு படங்களில் ( நீதி, ராஜா ) சிறிய வேடங்கள் வாங்கிக் கொடுத்ததற்காக இதே கணேசன் தூண்டுதலின் பேரில் " பிலிமாலயா " இதழில் மாடிவீட்டு ஏழையின் கதை என்று வன்மத்தை கக்கிய சந்திர பாபுவுக்கு கடைசியில் கணேசன் அடிவயிற்றிலேயே நெருப்பு வைத்த கதைதான் நடந்தது,
ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கணேசன் வீட்டு வாசலில் பரிதாபமாக நின்ற சந்திர பாபுவுக்கு கணேசன் செய்த மிகப்பெரிய உதவி என்ன தெரியுமா?
" உனக்குன்னு தனியாவா உலை வைக்கப் போறோம், வேணும்னா வந்து சாப்பிட்டுட்டு போ "
இது கணேசன் சொன்ன வார்த்தை,
இந்த ஒற்றை வார்த்தை சந்திரபாபுவை நிர்மூலமாக்கியதோடு மட்டுமல்ல அவரின் இறுதி யாத்திரைக்கும் வழி வகுத்தது,
இந்தத் தகவல் நாம் சொல்லவில்லை " தினமலர் " வாரமலரில் 2014ல் வெளிவந்த தகவல்
ஆனால் இந்த கணேசன் பதர்கள் கை தூண்டிக் காட்டுவது தலைவரை,
அதேபோல் இவர்கள் அடிக்கடி சொல்லும் இன்னொரு உலகமகா பொய்
" திருவிளையாடல் படம் சென்னையில் " எங்க வீட்டுப் பிள்ளையை தாண்டி வசூலித்தது என்று சொல்லி எங்க வீட்டுப் பிள்ளை வசூலுடன் கூட ஒரு 500 ரூபாய் போட்டு வசூலை அடித்து விடுவார்கள்,
மற்ற இடங்களில் சொல்ல முடியாது காரணம் எல்லா ஊரிலும் சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி அரங்குகள் இல்லேல்ல 😄😄😄😄😄😄😄😄,
இன்று நம்முடைய தலைவரின் பக்தர் பெங்களூரு குமார் சார் பழைய " பேசும் பட " பத்திரிக்கையின் தகவலை பத்திரிக்கை ஆதாரத்துடன் screen shot எடுத்து அனுப்பியிருக்கிறார்கள்,
அதில் வந்த வசூல் கணக்கு சென்னையில் மட்டும்
எங்க வீட்டுப் பிள்ளை - 13,23,689.22,
திருவிளையாடல் - 12,82,002.91
இது எப்படி இருக்கு?
கிட்டத்தட்ட 41,686.31 ரூபாய் கூடுதல் வசூல் எங்க வீட்டுப் பிள்ளை சென்னையில் மட்டும்
மற்ற இடங்களின் எங்க வீட்டுப் பிள்ளையின் வசூலில் கால் பங்கு கூட வரவில்லை " திருவிளையாடல் "
வந்த அபரிதமான லாபத்தில் தலைவர் நாகிரெட்டிக்கு ஒரு லட்ச ரூபாயை திருப்பிக் கொடுக்க முன் வந்தார்,
ஆனால் செலவழித்த பணத்தைக் கூட எடுக்க முடியாமல்திருவிளையாடலால் முக்காடு போட்ட ஏ. பி. நாகராஜனுக்கு " தில்லானா படத்தின் உரிமையையும் தானே எடுத்துக் கொண்டு பெரிய ஜமுக்காளத்தை தலையில் போட வைத்தவர் கணேசர் 😀😀😀😀😀😀😀😀😀😀😀,
ஆனால் பூஜை போட்ட அன்றே எல்லா ஏரியா வையும் விற்று " இவ்வளவு நாளும் மற்றவர்களை வைத்து படம் எடுத்தேன், ஆனால் இந்தப் படத்தினால் இப்போதுதான் பணம் எடுத்திருக்கிறேன் " என்று ஏ. பி. நாகராஜன் சொன்ன " நவரத்தினத்தை " கழுவி ஊற்றுவார்கள் இந்த பதர் பயலுக,
நவரத்தினம் முதல் வார வசூலில் மதுரை தங்கத்தில் எடுத்த வசூலை கணேசனின் எந்தப் படமும் எடுத்ததில்லை என்பதுதான் மிகப்பெரிய காமெடி,
100 நாட்கள் ஓடாமலேயே நவரத்தினத்தின் வசூல் சாதனையை கணேசனின் அப்போதைய எந்தப் படமும் கிட்டே கூட நெருங்க முடியவில்லை, ஆனால் இவர்களுக்கு அது தோல்விப் படம்,
ஒரு தோல்விப் படம் என்று இவர்கள் சொல்லும் ஒரு படத்தின் வசூலே இப்படி என்றால் தலைவரின் படம் "யானை படுத்தாலும் குதிரை மட்டம் " என்று ஆரூர்தாஸ் சொன்னது எவ்வளவு நிஜம்,
அப்புறம் அடிக்கடி இவர்கள் சொல்லும் இன்னொரு பொய் 72 வது வருஷம் எங்க படம்லாம் எப்படி தெரியுமான்னு அடிச்சு விடுறது 😄😄😄😄😄😄😄😄,
அதுக்கு போன மாத " தினகரன் " பத்திரிக்கையில் அவர்கள் இந்த கணேசன் குஞ்சுகளுக்கு மொத்தமாக வைத்த ஆப்பு என்ன தெரியுமா? 😄😄😄😄😄😄😄,
" இதய வீணை " படத்தைப் பற்றி எழுதிவிட்டு முத்தாய்ப்பாக சொன்ன விஷயம் என்ன தெரியுமா?
" இதய வீணையின் இரண்டு வார வசூலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அப்போது வந்த சிவாஜியின் படங்கள் திணறின "😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄,
இன்னும் பல கணேசனின் சுவாரஸ்ய செய்திகளுடன் அடுத்த பதிவில்,
ஜே. ஜேம்ஸ்வாட்,
குமரிக் கடற்கரை! (Thanks to mr. J. JamesWatt)............
 

 

Leave a Reply