• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை

இலங்கை பெண்கள் பணியகமும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினம் நேற்றைய தினம்  மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் ‘பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை’எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் , சிறப்பு விருந்தினராக வடமாகாண நகர அபிவிருத்தி சபை பிரதிப் பணிப்பாளர் க.கஜீவன், கெளரவ விருந்தினராக பாலம் செயற்றிட்டம் முகாமையாளர் சுவீற்ரி தேவராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் அவர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை கண்காட்சி முன்னதாக விருந்தினர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன
 

Leave a Reply