• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் சுட்டுக்கொலை

கனடா

கனடாவில் வசித்து வந்த பஞ்சாப்பை சேர்ந்த 27 வயது இளைஞன் வான்கூவர் அருகே சர்ரே பகுதியில் ஜஸ்மான் சேகோன் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணைகளின் அடிப்படையில் தெரியவருவதாவது,

சம்பவ தினத்தன்று சிலர் அவரை காரில் 2 பேர் துரத்தி சென்றுள்ளதாகவும் பின்னர் அந்த காரில் இருந்து இறங்கிய 2 பேர், ஜஸ்மான் சேகோனை மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் இந்தக் கொலை திட்டமிட்டே நடத்தப்பட்டது என்பதும், குற்றக் குழுக்களுடன் தொடர்புடையது என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

Leave a Reply