• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தங்கச் சுரங்கத்தில் 70-க்கும் மேற்பட்டோர் படுகொலை - ஆயுத கும்பல் அட்டூழியம் 

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டில் பயங்கரமான உள்நாட்டுப் போர் வெடித்தது.

நாட்டின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியே இந்த போருக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இதற்கிடையே பிற கிளர்ச்சிக் குழுக்களும் அங்கு இயங்கி வருகின்றன.

இந்நிலையில் கடந்த மார்ச் 28 அன்று, தலைநகர் ஜூபாவிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெபல் ஈராக் என்ற தங்கச் சுரங்கத்தில் ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

இந்த கொடூரத் தாக்குதலில் அங்கு தங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 70 க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பலியானவர்களின் எண்ணிக்கை 85 வரை இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தங்கச் சுரங்க உரிமை தொடர்பான தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply