• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

இலங்கை

மட்டக்களப்பில்,  களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனித புதைகுழி கண்டறியப்பட்ட இடத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.

நீதிமன்ற உத்தரவின்படி, பாதுகாப்பு படைகள் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அகழ்வுப் பணிகளை தொடங்கி உள்ளனர். 1990ஆம் ஆண்டு ஜுலை 12ஆம் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிய பிறகு கல்முனை வழியாக காத்தான்குடியை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த போது, குருக்கள்மடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அவரை கடத்தி படுகொ*லை செய்து புதைத்ததாக சொல்லப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவின் பேரில்,  களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி நேரடியாக மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் நடக்கின்றன. அதிகாரிகள் இந்த புதைகுழியில் அடையாளங்கள் மற்றும் சாட்சியங்களை சேகரித்து,  கடந்த சம்பவங்களைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.

இச்சம்பவம்இ 1990ஆம் ஆண்டு நடந்த கொ*லையின் தொடர்பான முக்கிய ஆதாரங்களை வெளிப்படுத்தக்கூடும் என நம்பப்படுகிறது. சட்டத்தரணிகள் , பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர் குழுக்களும் இடத்தில் சுய பாதுகாப்புடன் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அகழ்வுப் பணிகள் முழுமையாகவும்,  பாதுகாப்புடன் நீதிமன்ற மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது
 

Leave a Reply