இலங்கையின் ஊடகத்துறை முன்னோடி K.V.S.மோகன் சென்னையில் காலமானார்.
இலங்கை
வீரகேசரி நாளிதழின் ஆரம்பகால ஆசிரியர்களுள் ஒருவரான அமரர் திரு.K.V.S.வாஸ் அவர்களின் அன்புப் புதல்வர்.
சென்ட். பெனடிக்ற் கல்லூரியின் முன்நாள் மாணவர்.
இலங்கையில் 1959ம் ஆண்டிலேயே தமிழகச் சஞ்சிகைகளுக்கு இணையாக, முதன்முதலில் “கதம்பம்” என்ற சஞ்சிகையை ஆரம்பித்து 3 தசாப்தங்கள் வெற்றிகரமாக நடத்திய சாதனையாளர்.
60பதுகள் முதல் மூன்று தசாப்தங்கள் தென்னிந்திந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் பலரோடு நட்புறவோடு நெருங்கிப் பழகியவர்.
70 பதுகளின் நடுப்பகுதி முதல் சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வானொலியில் நான் தயாரித்து நடத்திய பல நிகழ்ச்சிகள் (IOBயின் இசையணித் தேர்வு,கலைக்கதம்பம்) மற்றும் தென்னிந்தியக் கலைஞர்கள் ஜெமினி கணேஷ், ஶ்ரீவித்தியா, ஜ.எஸ்.ஆர் ஆகியோருடன் எமது கலைஞர்களும் சேர்ந்து நடித்த தொடர் நாடகம் (M.அஷ்ரப்கான் எழுதிய) ‘அணிச்சமலர்கள்’ போன்ற ஏராளமான படைப்புகளுக்கு களம் அமைத்துத்தந்தவர் அவரே. அவரது விளம்பர நிறுவனத்தின் மூலமாகத்தான் அத்தனை நிகழ்ச்சிகளும் வானொலியில் ஒலிபரப்பாகின்.
அதுமட்டுமா? வரலாறு படைத்த நடிக,நடிகையர்,கவிஞர்கள்,இசையமைப்பாளர்கள்,இயக்குநர்கள், என நூற்றுக்க கணக்கான சாதனையாளர்களை நான் நேரில் சந்தித்து ‘செவ்வி’ கண்டு வானொலியில் ஒலிபரப்பப் பாலம் அமைத்த தோழரும் அவரே.
கடந்த ஆண்டு மே மாதம் 31ம் திகதி தான் கொழும்பில் SSC மண்டபத்தில் பள்ளித்தோழர்கள், நண்பர்கள் எல்லோரும் ஒன்று கூடி அவரது 85வது அகவையை கொண்டாடி வாழ்த்தி மகிழ்ந்தோம். 86வது அகவையைத் தொடும் முன்பே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.
அன்னாரது பிரிவால் துயருறும் அவரது துணைவியருக்கும் மகன்,மகள், பேத்தி ஆகியோருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்புச் சகோதரர் KVS.மோகனின் ஆன்மா நற்பேறு அடைய எமது இதயங்களின் பிரார்த்தனைகள்.
B.H. Abdul Hameed























