• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள்கள் மீட்பு

இலங்கை

வவுனியா ஏ9வீதியில் தாண்டிக்குளம் பகுதிக்கு அண்மையில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி எரிபொருட்கள் விசேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு கைப்பற்றப்பட்டது.

விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை அடுத்து அந்தப்பகுதியில் உள்ள பிரபல வாகன திருத்தகம் ஒன்று இன்று இரவு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 900 லீற்றர் சுப்பர் டீசல், டீசல் 600 லீற்றர், பெட்ரோல் 400 லீற்றர் என்பன கைப்பற்றப்பட்டது

கைப்பற்றப்பட்ட எரிபொருட்கள் ஏனைய சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
 

Leave a Reply